Wednesday, February 11, 2009

கடலும் கதிரவனும்


கதிரவன் அழைத்தான் என்று
கடல் நீர் துளிகள் நீர்ஆவியாய் மாறி
மேலே சென்று மேகமாய் மாறியது
வானில் சென்றவுடன் வானம் சொன்னது
நீ இன்னும் மேலே சென்றால் காணாமல்
போய்விடுவாய் என்றது
இதை கேட்ட மேகத்தின் உள்ளம்
சோகத்தால் கருத்தது
அப்போது அங்கு வந்த காற்றோ
மேகத்தை பார்த்து ஏன் என்
வழியில் நிற்கிறாய் ,வழிவிடு என்றது
இனிமேல் நீ கடலுக்கு திரும்ப முடியாது
என்னுடன் வா என்றது
காற்றுடனே மேகம் சென்றது
வழியில் உயர்ந்த மலைகள் தடுத்தது

அதன் மீது மோதிய மேகம்
நம் கதி இப்படி ஆகிவிட்டதே என்று
அழ தொடங்கியது
உடனே பூமியில் உள்ள உயிர்கள்
மழை பெய்கிறது
இனி நாம் மகிழ்ச்சியாக வாழலாம் என்றன
முழுவதுமாக கரைந்து போன மேகம்
நிலத்தில் ஆறாக ஓடியது
அனைவருக்கும் பலவிதமான
நன்மைகளை அளித்துவிட்டு
திருப்தியுடன் மீண்டும் கடலில்
சென்று கலந்தது .


மேற்கண்ட கதையிலிருந்து என்ன புரிகிறது ?
கடல் நீர் என்பது உயிர்களாகிய நாம்
கடல்நீர் ஆவியாக மாறுவதைபோல்
நாமும் நாம் உடல் என்ற நினைவிலிருந்து
ஆன்மா என்ற உண்மையை உணர்ந்தால்தான்
கடவுளின் காட்சியை காணமுடியும்
கண்ணெதிரே இருக்கும் கடவுளை நோக்கி
செல்ல முடியும்
ஆனால் கடவுளுக்கு அருகில் நெருங்க
வேண்டுமென்றால்
கதிரவனின் வெப்பத்தால் நீராவி என்ற
அந்த நிலையையும் இழந்து நீர் காணாமல்
போவதைபோல் ஜீவான்மா ஆகிய நாம்
பரமான்மா ஆகிய இறைவனுடன்
ஒன்றாக கலந்துவிடுவோம் .

No comments: