போகி சிந்தனைகள் அனைவரும் போற்றும்படியான வாழ்வு வாழவும் அனைவருக்கும் அனைத்துவிதமான வளங்களும் கிடைத்து மகிழவும் ஏற்பட்ட போகி பண்டிகை இன்று அனைத்து மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மாபாதக செயலை செய்து வரும் செயலாகிவிட்டது என்பது வேதனைக்குரியது .பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற சொல் வழக்கிற்க்கொப்ப வீட்டில் பழைய பயன்படுத்துவதற்கு உதவாத பொருட்களை போகியன்று தீயிட்டு எரிப்பது தொன்றுதொட்டு நம் நாட்டில் இருந்து வரும் பழக்கம் அந்த காலத்தில் செயற்கை பொருட்கள் இல்லாமையால் சூழ்நிலைக்கு மாசு ஏற்படாமல் இருந்து வந்தது .ஆனால் இன்றோ நவீன கால அரக்கர்களான பிளாஸ்டிக் ,மறு சுழற்சி செய்ய முடியாத தற்கால அவதாரங்களான பிளாஸ்டிக் பைகள் ,பொம்மைகள் ,பழுதடைந்த செல் போன்கள் ,கம்ப்யூட்டர் பாகங்கள் ,பல்வேறு நச்சு பொருட்களாலான ரசாயனங்களை கொண்ட காலி பாட்டில்கள் ,டயர்கள் ,,குடிநீர் மட்டும் குளிர்பான பாட்டில்கள் பிளாஸ்டிக் பாய்கள் என நீண்டு கொண்டு போகும் பட்டியல்களில் உள்ள பொருட்களை போட்டு அதிகாலையில் எரித்து அதனால் எழும் பலவிதமான நச்சு புகை மண்டலம் தமிழ்நாடு முழுவதும் பனி மூட்டம் காரணமாக எங்கும் செல்லாமல் கூரை போல் கவிந்து அனைத்து மக்களுக்கும் கண் ,தோல் ,மற்றும் சுவாச பைகளில் நச்சு காற்றை நிரப்பி நோய்களையும் , துன்பத்தையும் உண்டாக்கும் இந்த அறிவீன செயல்களை செய்யும் தன்னை அறிவுடையவர்களாக நினைத்துகொள்ளும் மனிதர்களை என்னவென்று சொல்வது ?. ஊடகங்கள் மூலமும், , சமூக ஆர்வலர்கள் எவ்வளவு இந்த தீமைகள் குறித்து பிரச்சாரம் செய்தாலும் , அரசுகள் அபராதம் விதித்தாலும் மக்கள் இன்னும் விழிப்புணர்வு கொள்ளாதிருப்பது வேதனைக்குரியது .அறிவு அற்றம் காக்கும் கருவி என்பார் ஆனால் இந்த மக்களுக்கு அறிவு சுற்றம் கெடுக்கும் கருவியாக அமைந்திருப்பது விந்தையாக உள்ளது .இந்த போகி கீழ்காணும் சிந்தனைகளை அனைவரும் வளர்த்துகொண்டால் எதிர் காலத்திலாவது வீடும் நாடும் நன்றாக இருக்கும் ,இறைவன் அந்த எண்ணத்தை மக்களுடைய உள்ளத்தில் தூண்டட்டும்
போகட்டும் கீழ்த்தரமான சிந்தனைகள்
போகட்டும் கிறுக்கு புத்தி
போகட்டும் கீழோரை வெறுக்கும் போக்கு
போகட்டும் கிளர்ந்தேழா மந்த தன்மை
போகட்டும் கீழோர் மேலோர் பாகுபாடு
போகட்டும் கிறக்கம் தரும் போதை பழக்கம்
போகட்டும் கிழ பருவ தாழ்வு மனப்பான்மை
போகட்டும் கீழே தள்ளும் அகந்தை குணம்
போகட்டும் கிழ் மட்டத்தில் உள்ளோரை கொடுமை செய்யும் குணம்
போகட்டும் கிழ் நிலை மக்களை இழிவு செய்யும் போக்கு
போகட்டும் கிலேசத்தை தூண்டும் பேச்சுக்கள்
எங்கெங்கும் காணினும் சக்தியடா என்றான் பாரதி
ஆனால் இன்றோ எங்கெங்கும் காணினும் குப்பையடா
என்று முகம் சுளிக்க வைக்கும் நிலைக்கு அனைவருமே பொறுப்பு
வீட்டின் முன்பு தண்ணீர் தெளித்து அழகான கோலமிட்டு ஹாப்பி பொங்கல்
என்று கோல மாவில் பலவித நிறங்களில் வைத்துவிட்டால் போதும் என்று
நினைக்கும் மக்கள் வீட்டில் எதிரிலும் பக்கத்திலும் குப்பைகளை
அப்படியே சேமித்து வைத்து அழகு பார்க்கும் தன்மை எப்போது நீங்கும் என்பது உணர்வுடையோர் கேட்கும் கேள்வி
வீட்டில் உள்ள குப்பைகளை வீதியில் கொட்டி
சுற்றுபுறத்தை பாழ்படுத்துவோரைபோல்
அனேக எழுத்தாளர்களும் , இயக்குனர்களும் ஆபாசத்தையும்
வன்முறைகளையும் தீய சிந்தனைகளையும் எழுத்திலும் ,
திரைப்படங்களிலும் பரப்பி மக்களின் உள்ளங்களையும்
பாழ்படுத்திவிட்டு பிறகு உலகம் கெட்டுவிட்டது என்று
எல்லோருடனும் சேர்ந்து புலம்புவதை என்னவென்று சொல்வது ?
உள்ளம் சுத்தமானால் உடல் சுத்தமாகும் ,
உலகமும் சுத்தமாக ஆகும்
.தயவு செய்து யாராவது சுத்தம் செய்ய வருவார்கள்
என்று சோம்பி இருக்காதீர்கள் .
அவ்வாறு நினைத்தால் குப்பைகளுடனேதான் இவ்வுலகத்தை
விட்டு நீங்கி மீண்டும் சேர்த்து வைத்த
குப்பையில்தான் பிறக்க நேரிடும் ..
No comments:
Post a Comment