கோபம் ஏன் வருகிறது?
பிறர் நம்முடைய எண்ணங்களுக்கு.செயல்களுக்கு
தடையாக வரும்போது.
அதற்க்கு ஏன் நாம் அவர்களிடம் கோபப்படவேண்டும்?
ஒன்று தடையை நீக்க முயற்சி செய்யவேண்டும் அல்லது
அவர்களுக்கு நம் எண்ணத்தை புரியவைத்து
அவர்கள் நமக்கு இடையூறு செய்யாமல்
இருக்க செய்ய வேண்டும்
ஆனால் உலகில் என்ன நடக்கிறது?
இந்த இரண்டும் பெரும்பாலானோர் செய்வதில்லை
குறுக்கே வருபவர்களிடம் கோபம் கொண்டு
அவார்களின்சக்தி முழுவதையும் வீணடித்து
அவர்களின் குறிக்கோளையே மறந்து பலவிதமான
சிக்கல்களில் மாட்டிகொள்கிறார்கள்
பிறர் நம் எண்ணங்களை எதிர்ப்பதற்கு என்ன காரணம்?
ஒன்று அந்த எண்ணம் அவருக்கு எதிரானதாக இருக்கலாம் அல்லது
பொறாமையின் வெளிப்பாடாக கூட இருக்கலாம்
நம் எண்ணம் சுயநலமற்றதாக இருந்தால் அந்த எதிர்ப்பை பற்றி
பொருட்படுத்த தேவையில்லை.எனினும் அவருக்கு நம்
நோக்கத்தை புரியவைத்து அவரையும் நம்மோடு சேர்த்துக்கொண்டு
குறிக்கோளை அடைய முயற்சி செய்பவர்களே பாராட்டுக்குரியவர்கள்
No comments:
Post a Comment