கல்லூரி இளைஞனே
கல்லூரி இளைஞனே
இளைஞனே விழித்துகொள்வாய் இக்கணமே
சிந்தித்து செயல்படுவாய் தெளிவுடனே
கல்லூரி பருவத்திலே கல்வி கற்பதை விடுத்து
கவனத்தை சிதறடிக்கும் காதல் தேவைதானா ?
மோகத்தில் சிக்கி போகத்தில் வீழ்ந்தால்
வாழ்வின் குறிக்கோள் நிறைவேறுமோ ?
போதைக்காக கஞ்சா அடிக்கும் தம்பியே
நீ காவல் துறையிடம் சிக்கினால் ;
பல ஆண்டுகள் எண்ண வேண்டும் கம்பியே
விட்டுவிடு உடனே அதை எண்ணியே
உன் பெற்றோர்கள் இருக்கிறார்கள் உன்னை நம்பியே
ஜாதி என்னும் கூட்டுக்குள் உன்னை
சிறை வைத்துகொண்டால் பிறகு நீ சாதிப்பது
எங்ஙனம் ?
நல்லதோர் வாழ்க்கைக்கு நற்பண்புகளும் நற்க்கல்வியுமே ,அடித்தளம்
அடித்தளம் சரியில்லா கட்டிடம் ஆட்டம கண்டுவிடும்
அதுபோல்தான் பள்ளிப்பருவத்தில் அரசியலில் நுழைவதும் .
நாடும் வீடும் நம் இரு கண்களே
இரண்டும் நன்றாக இருக்க பரந்த மனமும்
கடும் உழைப்பும் கொண்டவனாக உருவாவது
உன் கையில்தான் உள்ளது
No comments:
Post a Comment