Thursday, September 4, 2008

அன்புதான் இவ்வுலகை காக்கும் மந்திரம்




வன்முறைகளால் என்றும் நன்மை இல்லை.
உலகில் உள்ள மக்கள் அனைவரும் மதம்,மொழி,இனம் அனைத்திற்கும் அப்பாற்பட்டு அனைவரையும் சகோதரர்களாக நினைக்க வேண்டும் .வெளி நாட்டிலிருந்து மற்ற நாட்டிற்குள் ஊடுருவி வெடிகுண்டுகளை வெடித்து அப்பாவி மக்களை கொல்லும் தீவிரவாதிகளுக்கு அந்த நாட்டில் உள்ள சிலர் ஆதரவும் அடைக்கலமும் கொடுக்காமல் இருந்திருந்தால் உலகில் இவ்வளவு துயர சம்பவவங்கள் நடந்திருக்குமா?.பழிக்கு பழி வாங்கும் மனோபாவம் முடிவில்லாத துயரத்தைத்தான் தரும்.எந்த மதத்தை,மொழியை,இனத்தை,சார்ந்தவராயினும் வன்முறையை கைவிட்டு அஹிம்சை வழியில் பிறருக்கு நன்மை செய்யாவிடினும் தீமை செய்யாமல் இருக்க பழகி கொள்ள வேண்டும். இதற்க்கு மதத்தலைவர்களும், அரசியல் தலைவர்களும், மக்களை நல்வழியில் நடத்த நல்ல எண்ணங்களை தர எல்லோரையும் படைத்த இறைவன்தான் அறிவை அளிக்க வேண்டும்.அன்பு ஒன்றுதான் இவ்வுலகையும்,இவ்வுலக உயிர்களையும் அழிவிலிருந்து காக்கும் .அருமருந்து

No comments: