Thursday, September 4, 2008

போதைக்கு அடிமையாகாதீர்


போதைக்கு அடிமையாகாதீர்
போதைக்கு அடிமையாகாதீர்
கஞ்சா என்னும் நஞ்சு
அதை உண்டால் வெந்து புண்ணாகும் உன் நெஞ்சு
புகை பிடித்தால் தோன்றும் இன்பம்
புற்று நோய் வந்தால் தாங்க முடியாது துன்பம்
கள்ள சாராயம் குடிக்காதே
கை கால் விழுந்து தவிக்காதே
கண்டதை போட்டு காய்ச்சிய சாராயத்தால்
கண்பார்வை பறிபோகும் ,கண நேரத்தில் காலனும் உயிரை பறித்திடுவான்
உன்னையே நம்பியுள்ள குடும்பத்தை எண்ணியே
இனி குடிக்காதே
மூளையில் குழப்பத்தை தோற்றுவிக்கும்
குடியின் நெடியை முளையிலேயே கிள்ளிஎரியாவிடில்,உன்னை அழித்து உன் கல்லறை மீது முளைத்துவிடும் புற்கள் .
மதுவிற்கு அடிமையான பின் இழப்பதற்கு என்று ஏதும் இருக்காது ,ஒன்றன் பின் ஒன்றாக எல்லாமே போய்விடும் மானம் உட்பட.


No comments: