பொங்கல் முதல்நாள் போகி
அன்று தமிழ் நாடு நாடு முழுவதும்
வெளிவிடும் நச்சு புகை வானை நோக்கி
மக்கள் மூச்சு திணறுவார்
நச்சுகாற்றை உள்வாங்கி
இன்றே நிறுத்துவோம் இந்த மூட பழக்கத்தை
உடலை அழிக்கும் புகை பிடித்தலையும் சேர்த்து
மனித மனங்களை விட்டு அகலட்டும்
தீமை விளைவிக்கும் தீய எண்ணங்கள்
சபதம் ஏற்போம் சபதம் ஏற்போம்
இனி வீதியில் விட்டெறிய யமாட்டோம்
பிளாஸ்டிக் குப்பைகளை
அனுபவிப்போம் அனுபவிப்போம்
அதிகாலை தூய காற்றை
அடியோடு நிறுத்திடுவோம்
அடியோடு நிறுத்திடுவோம்
குப்பைகளை கொளுத்தி காற்றை
மாசுபடுத்தும் கற்கால வழக்கத்தை
சுற்றுபுறத்தை சுத்தமாக வைப்போம்
சுகமான வாழ்வுக்கு வழி வகுப்போம்
புது பானையில் பால் பொங்கி வழிந்தோடலாம்
தெருவில் சாக்கடை நீர் வழிந்தோடலாமோ ?
இனிக்கும் கரும்பை கடித்து சுவைக்கலாம்
கண்ட இடங்களில் துப்பி
சுகாதார கேடு விளைவித்தல் தகுமோ?
தனக்கென எதுவுமின்றி அனைத்தையும்
இவ்வுலகிற்கு அளித்துவிடும் கால்நடைகள்
நன்றிகடனாக நாம் அவைகளை உயிருடன்
அனுப்பிவிடுவது கசாப்புகடைகள்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற
திருவள்ளுவர் காட்டும் அன்பு நெறி
உள்ளது ஏட்டில் மட்டும்
ஆருயிர்கெல்லாம் நான் அன்பு செய்யவேண்டும்
என்ற வள்ளலாரின் போதனை அவருக்கு
மட்டும்தான் என்று விட்டுவிட்டனர் தமிழ் மக்கள்
அன்றாடம் இரக்கமற்ற உயிர்கொலைகள்
அதை இறைவனுக்கு படைத்து
உண்ணும் அரக்க மனம் கொண்டோர்
பெருகிவிட்டது நம்நாட்டில்
இறைவன் படைப்பில் அனைத்தும் சமமே
இதை உணர்ந்து அனைவரும் அன்போடு வாழும்
திருநாள் என்றுதான் வருமோ
அன்றுதான் உண்மை பொங்கல் திருநாள்
1 comment:
நல்ல சமூக அக்கறை உள்ள பதிவு வாழ்த்துக்கள்.
Post a Comment