Monday, December 28, 2009

கல்வி கற்க வேண்டுமென்றால் .......

ஒரு மனிதனாக பிறந்தவன் கல்வி கற்க வேண்டும்
அதை எவ்வாறு கற்க வேண்டும் ?
கசடற அதாவது பிழையற கற்க்கவேண்டும்
அதற்க்கு தகுந்த ஆசானை தேடி சென்று

அவரிடம் கற்க வேண்டும்
அவ்வாறு கற்றபின் கற்றதை
வாழ்க்கையில் நடைமுறைபடுத்த வேண்டும்

இவ்வாறு திருவள்ளுவர் குறள் ஒன்றில்
தெரிவிக்கின்றார் ’

அந்த காலத்தில் கல்வி கற்க வேண்டுமென்றால்
தக்க குருவிடம் நாம்தான் செல்ல வேண்டும்
பல்லாண்டுகள் அவரிடம் தங்கி
நாம் கல்வியின் அனைத்து பரிமாணங்களையும் கற்க வேண்டும்
அதனால் அனைவருக்கும் கல்வி என்பது எட்டா க்கனியாக இருந்தது
கல்வி கற்ப்போரிடம் அந்த காலத்தில் ஜாதி
வித்தியாசம் , ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு காட்டப்படவில்லை .
காலபோக்கில் அவைகள் சமுதாயத்தில் வந்து புகுந்துவிட்டன
அன்று அரச குமாரனும் , அந்தன குமரனும் ,மற்ற சாதியினரும்
ஒன்றாகத்தான் கல்வி பயின்றார்கள் .
கல்வி முடிந்ததும் அவரவர் அவர்கள் பிறந்த
குடி தொழிலை செய்ய தொடங்குவர் .

ஆனால் இன்று நடப்பது என்ன ?

இன்று கல்வி இலவசமாக வும் கிடைக்கிறது. காசுக்கும் கிடைக்கிறது

பள்ளியில் சென்று படிக்கலாம் அல்லது வீட்டில் இருந்தபடியேயும் படிக்கலாம்,

நூல்கள், ஊடகங்கள் மூலமும் கல்விகற்க்கலாம்

கல்வி பெறுவதனால் அறிவு உண்டாகி,விலங்குகள் போன்ற மனிதர்கள், மனிதர்களாகவும், மாமனிதர்களாகவும் உயர்ந்து இறைநிலை அடையவேண்டும்

ஆனால் இன்று நடப்பதென்ன?

விலங்குகளிடையே இருக்கும் மூர்க்கத்தனம், காரணமின்றி சண்டையிடும் பண்பு, சிந்திக்கும் திறனின்மை ஆகிய குணங்கள்தான் கல்வியறிவு பெற்றவர்கள்,மற்றும் பெறாதவர்கள் மத்தியில் நிலவுவது வேதனையளிக்கிறது.

அவர்கள் பெறும்,பெற்ற கல்வியறிவு அவர்களை ஒரு நல்ல பண்பான மனிதனாக, ஒழுக்கம் உள்ளவராக, நேர்மை உடையவராக், சுயநலம் அற்றவராக, இரக்கம் உள்ளவராக, அன்புடையவர்களாக உயர்த்தவில்லை ,என்றால் அவர்கள் பெறும் கல்வியில் கோளாறா அல்லது அதை கற்பித்தவர்களின் திறமையின்மையா?

கல்வி கற்றபின்பும் விலங்குகள்போல் மனிதர்கள் ஏன் நடந்து கொள்கிறார்கள்?

நம் கல்வி கற்கும் பொருட்களிலும் ,முறைகளிலும் மாற்றங்களை செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை சம்பந்தப்பட்ட இடத்தில உள்ளவர்கள் உணரவேண்டும்.

No comments: