Friday, December 18, 2009

இந்து மதம்

இந்து மதம்
சில கேள்விகள் -சிலரின் பதில்கள்

கேள்வி.கணை
தென்னாடுடைய சிவனே

போற்றிஎன்னாட்டவர்க்கும் இறைவா போற்றிஎன்று பாடுகிறீர்களே?

பின் ஏன் சிவன் ஆலயத்தின் வாயிலிலே பிற

மதத்தவர்கள்உள்ளே நுழைய அனுமதி கிடையாது என்று

தகவல் பலகை வைத்திருக்கிறீர்கள்?

அப்படியானால் அவர்களுக்கு சிவன் இறைவன் கிடையாதா?

அவர்களுக்கு வேறு கடவுள் இருக்கிறாரா?

சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருப்பதால்தான்
இந்த(இந்து)மதம் மக்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணுகிறது.

குருவாயூரிலும் அப்படிதான்எல்லா

உயிரிலும் வாசம் செய்யும் கேசவனை
நான் வணங்குகிறேன் என்று

தினம்தினம் மார்தட்டிகொள்ளும் வைணவர்கள்
எந்த ஜாதியை சேர்ந்தவனானாலும் அவனில்
கேசவன் வாசம் செய்கிறான் என்று

ஏன் ஏற்றுகொள்வதில்லை?

மனிதரில் பேதம் பார்ப்பவன் எவனும் இறைவனை

உணராதவர்களேஅவனை உணராத காரணத்தினால்

அவர்கள் மனம் அவர்கள் சார்ந்துள்ள மதத்தை,

மதக்கடவுளை அவர்களுக்கு மட்டும்
சொந்தமாக எண்ணுகிறது(சொந்த சொத்து போல்)

எப்போது ஆலயங்களில் உண்மைக்கு மாறான
இந்த போலிகள் ஒழிக்கப்படுகின்றவோ

அப்போதுதான் உண்மையான தெய்வீகம் மலர்ந்து

மக்களிடையே பேதம் ஒழியும்.

No comments: