Wednesday, November 18, 2009

தமிழறிஞர்களே உங்கள் பார்வைக்கு

தமிழறிஞர்களே உங்கள் பார்வைக்கு
தமிழிலக்கணம் கற்றதால் அதை அறியாரை

எள்ளி நகையாடுவதும்

அவரை தாழ்த்தி பேசுவதும் தகுமோ உமக்கு ?
எவ்வாறு பேசிடினும் தமிழ் மொழி பேசுபவன் தமிழன்தான்

என்பதை என்றுதான் உம் போன்றோர் உணர்வீரோ நானறியேன் ?
அனைத்தும் கற்றவன் என்று இறுமாந்த கம்பன்

ஏற்றம் இறைப்பவனிடம் பட்ட பாட்டை நீர் மறந்தீரோ ?

கற்றது கள்ளளவு கல்லாதது

கடலளவு என்ற அவ்வை பாட்டி

ஆடு மேய்க்கும் சிறுவனிடம்
சுடாத பழத்தை கேட்டு

தன் அறியாமையை சுட்டு கொண்டது
உம் நினைவிற்கு வரவில்லையோ ?

மாடு மேய்க்கும் இடையனை

மஹாகவி காளிதாசனாக்கி பண்டிதர்களை

அவன் காலடியில் மண்டியிட வைத்த

அந்த மாகாளியின் பெருமையை மறந்தீரோ ?
இலக்கணம் படித்து தலைக்கனம் பிடித்து

அலைந்தால் யாருக்கு லாபம் ?

ஊருக்கா இல்லை உம் போறோருக்க்கா ?

எனக்கு புரியவில்லை
நாம் அனைவரும் தமிழ் தாயின் மைந்தர்கள்
என்பதை என் மறந்தீர் ?
அன்னைக்கு அவள் மைந்தர்கள் அனைவரும் ஒன்று
அவ்வாறிருக்க தமிழர்களை என் கூறு போடுகிறீர்?

சாதியால் இணையமுடியாது
மதத்தினால் இணைய முடியாது
மொழியால் இணையவும்
விடமாட்டேன் என்று உறுதி பூண்டு
குருதியினை என் சிந்துகிரீர் ?
எவ்வளவு பிரிவுகள் இருந்தாலும்

ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும்
பிற மொழியினர் மொழியால் இணைந்து

நம் தாய் மண்ணில் உயர்ந்து நின்று கோலோச்சுவதை

கண்டும் ஏன் இவ்வாறு அறியாமையில் உழல்கின்ரீர் ?
உமக்கு தெரிந்தால் சொல்லுங்கள்

கற்றிலனாயினும் கேட்க என்றானே வள்ளுவன் அவன் சொல்லை நினைத்து
உம் சொல்லை செவி மடுக்கிறேன்
(இன்னும் வரும் )

No comments: