அகந்தையின் பல்வேறு பரிமாணங்கள்
அகந்தை இல்லாத மனிதர்கள் கிடையாது
ஏன் அகந்தை இல்லாத தெய்வங்களும் கூட கிடையாது
அகந்தை இருப்பதை யாரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்
உனக்கு அகந்தை இருக்கிறது என்று சொன்னாலே போதும்
அவ்வாறு சொன்னவர்களை உண்டு இல்லை
என்று பண்ணிவிடுவார்கள்
நீதான் அகந்தை பிடித்தவன் உனக்கு என்னை அகந்தை
பிடித்தவன் என்று சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது
என்று ஒரு நீண்ட பட்டியலே போட்டு
சித்திரவதை செய்துவிடுவார்கள்
உனக்கு அகந்தை இருக்கிறது என்று சொன்னவர் பயித்தியம்
பிடித்து ஓட வேண்டிய சூழ்நிலை கூட ஏற்பட்டுவிடும்
இனிமேல் நான் உன்னிடம் எதையுமே பேசமாட்டேன் என்று
மண்டையில் அடித்து கொள்வார்கள் ,
அத்தோடு மட்டுமல்லாமல் அன்போடு
பேசிக்கொண்டிருந்த இரண்டு
உள்ளங்களும் தனக்குதானே
மனதை குழப்பிக்கொண்டு
நிம்மதியில்லாமல் திரிவார்கள்
இரண்டு ஜென்மங்களும் வெவ்வேறு திசைக்கு
சென்று மூலையில் உட்கார்ந்துகொள்ளும்
இரண்டு நாய்கள் காரணமில்லாமல்
சண்டையிட்டுக்கொண்டு
குலைத்து ஓய்ந்து இரண்டும்
வெவ்வேறு திசையில் ஓடிவிடும்
நம்மில் பலர் காரணமே இல்லாமல்
பேசி தினமும் சண்டையிட்டு
சச்சரவுகள் செய்து
அமைதியின்றி தவிக்கின்றோம் .
பெரும்பாலான நேரங்களில் ஒருவருக்கொருவர்
அன்போடு விட்டுகொடுத்து அனுசரித்து
ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டும் ,
அவரவர் விருப்பங்களை
பூர்த்தி செய்து கொண்டும் இருக்கின்ற நாம்
தன்னிடம் அகந்தை இருக்கிறது என்ற வார்த்தையை
மட்டும் காதில் கேட்ட மாத்திரத்தில் மட்டுமே
சுயநினைவு இழந்து வெறியாட்டம் ஆடி
நல்ல மகிழ்ச்சியான சுமுகமான சூழ்நிலையை
கெடுத்துக்கொண்டு விடுகிறோம்
இப்படி நம்முடன் கூடவே இருந்துகொண்டு
நம்மை பாடாய் படுத்தும் இந்த அகந்தை
பிசாசிடமிருந்து எப்படி தப்பிப்பது ?
நமக்குள்ளேயே இருந்துகொண்டு நம்மை
மறைந்திருந்துகொண்டு நாம் சற்றும்
எதிர்பாராமல் தாக்கும் இந்த எதிரியிடமிருந்து
நம்மை எப்படி காப்பாற்றிக்கொள்வது ?
அதன் பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள
ஏதேனும் வழிமுறைகள் உண்டா என்பது கேள்வி ?
இந்த பேயிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுவது நம்
போன்ற மனிதர்கள் மட்டுமல்ல ,தேவர்களும் , புலன்களை
அடக்கி தவம் செய்யும் முனிவர்கள் மட்டுமல்ல
தெய்வங்களும் கூடத்தான் என்பது புராண
இதிகாசங்களை படித்த அனைவருக்கும் தெரியும் .
இந்த ராஷசநிடமிருந்து தப்புவதற்கு ஒரே வழி
குருவிடம் பரிபூரண சரணாகதி செய்வது மட்டுமே
அனால் அதை செய்ய இந்த அகந்தை விடுமா ?
நிச்சயம் விடாது
அதற்க்கு மாபெரும் போராட்டம் நடத்தவேண்டும் .
வாழ்நாளெல்லாம் அதை எதிர்த்து போராடவேண்டும்
ஏனென்றால் தனக்கு அகந்தை முற்றிலும் முழுவதுமாக
நீங்கி விட்டது அகந்தை புதிய அவதாரம் எடுத்து
நம்மை மீண்டும் அது தன் வசமாக்கிவிடும் என்பது
ஞானிகள் கண்ட உண்மை .
ஒருவருக்கொருவர் அன்பு கொண்டவர்களிடையே
தோன்றும் அகந்தையானது சூரியனை கண்ட பனி போல்
சிறிது நேரத்திற்கு பின் விலகி சகஜ நிலைமைக்கு வந்துவிடும்
ஆனால் உள்ளத்தில் அன்பில்லாதவர்கள்
இடையே வெளிப்படும்
அகந்தையானது நீறு பூத்த நெருப்பு போல்
கனன்று கொண்டு தக்க சமயத்தை எதிர்பார்த்து
பழி வாங்க துடித்து கொண்டிருக்கும் .
அது மிகவும் ஆபத்தானது .
நீங்கள் எப்படி ?
உங்கள் உள்ளத்தை ஆராய்ந்து பாருங்கள்
.உண்மை புலப்படும்
உணர்ந்து திருத்திக்கொண்டால்
நமக்குத்தான் நன்மைகள் கோடி கோடி .
2 comments:
நல்லதொரு சிந்திக்க வைக்கும் பதிவு. மிக்க மகிழ்ச்சி.
நன்றி
ஆன்மீகத்தில் போலித்தனத்தை துகிலுரித்து காட்டி உண்மை வழிபாட்டை உலகுக்குணர்திய கபீரின் பெயர் கொண்டவரே .பாராட்டுக்கு நன்றி
Post a Comment