Sunday, July 26, 2009

உடம்பும்-உயிரும்

ஒரு பறவை தான் வசிக்க ஒரு கூட்டை கட்டுகிறது
பிறகு வேறு ஒரு பறவையுடன் இணை சேர்ந்து
இணைந்து கூட்டில் முட்டையிடுகிறது
முட்டைகள் குஞ்சு பொரித்து குஞ்சுகள் அந்த வீட்டில் வைத்து
வளர்க்கிறது . குஞ்சுகள் வளர்ந்து பெரிதாகியவுடன்
அவைகள் கூட்டை விட்டு பறந்து விடுகின்றன
.பிறகு அந்த கூட்டிற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை
அவைகள் கூட்டில் இருந்ததற்காக மகிழவும் இல்லை
ஒரு கால கட்டத்தில் அந்த கூட்டை விட்டு பறந்து
சென்றமைக்காக வருந்துவதும் இல்லை
அது போல்தான் உயிர் படைத்த எல்லா உயிர்களும்
ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் ஒரு கூட்டில்
வசிக்கின்றன .அவைகளின் நோக்கம் நிறைவேறியவுடன்
கூட்டை விட்டு சென்றுவிடுகின்றன .
அந்த கூட்டிற்கும் அதில் வசித்து வந்த உயிருக்கும்
உள்ள தொடர்பு அவ்வளவுதான்
ஆனால் மனித உயிர் இந்த உடல் என்னும் கூட்டில்
வசித்துக்கொண்டு இந்த உலகத்தில் எதற்காக
வந்ததோ அந்த கர்மங்களை செய்கிறது .
அது இந்த உலகத்திற்கு வந்த நோக்கம்
நிறைவடைந்தவுடன்
அடுத்த நோக்கத்தை நிறைவேற்ற
ஒரு புதிய உடலை தேடி
சென்றுவிடுகிறது .
இதுதான் உயிருக்கும் உடல் என்னும்
கூட்டிற்கும் உள்ள தொடர்பு
ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது?
உயிர் தன்னை மறந்து எப்போதும்
உடலை பற்றியே எந்நேரமும் நினைத்துக்கொண்டு
அதை பராமரிக்கவே (தான் விரைவில் மரிக்கபோகிறோம்
என்ற நினைவே இல்லாமல் ) தன் வாழ்நாள் முழுவதும்
தன் சக்தியையும் , உழைப்பையும் விரயம் செய்து
கொண்டிருக்கிறது இந்த உடலை விட்டு நீங்குவதற்கு
கவலைபடுகிறது ,பயப்படுகிறது
அவ்வுயிரை சுற்றி உள்ளவர்களும்
இறந்த உடலை கட்டி கொண்டு அழுகிறார்கள் .
ஒரு பறவைக்கு இருக்கின்ற ஞானம் ஆறறிவு
படைத்த மனிதனுக்கு ஏன் இல்லை ?
எனவே கீழ்கண்ட திருக்குறளை தினம் ஒரு முறை
படித்தோமானால் இந்த உடல் மீது
மோகம் கொள்ள மாட்டோம்
மற்ற முக்கியமான
வாழ்க்கையின் உயர்ந்த நோக்கங்களை அடைய
நமக்கு அதிக நேரம் கிடைக்கும்..
குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு
(நிலையாமை அதிகாரம் . குறள் எண் . 338)
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு தானிருந்த கூடு
தனியே இருக்க அதைவிட்டு வேறு இடத்திற்கு பறவை
பறந்து சென்றது போல் ஆகும் .

No comments: