இன்றைய உலகில் பெண்கள் படத்தை
போடாவிட்டால் எந்த விளம்பரமும்
மக்களை போய் சேர முடியாது
அதிலும் ஆண்கள் பயன்படுத்தும்
பொருட்களுக்கு கூட பெண்கள் படம்
போட்டால்தான் அந்த விளம்பரத்தையே
மக்கள் பார்ப்பார்கள்.
இது எப்படி இருக்கிறது என்றால்
மக்களில் பெரும்பாலானோர்
மனிதர்கள் கல்வியறிவு பெற்றிருந்தும்
இன்னும் கழிப்பிட வாசலில்
ஆணின் படமும் பெண்ணின் படமும்
போடவேண்டிய அவலமான
நிலைமை இருப்பதைபோல்தான் இருக்கிறது.
பெண்கள் தாங்கள் எவ்வளவு கேவலபடுத்தபடுகிறோம்
என்று உணராத நிலையில் இருப்பதும் அதே நேரத்தில்
பெண்களை ஆணினம் ஆதிக்கம் செலுத்துகிறது
என்று மேடைகளில் பட்டி மன்றம் நடத்துவது
கேலிக்கு உரிய விஷயம் என்பதை
அவர்கள் உணர்ந்துகொள்வதாக
தெரியவில்லை.
உதாரணத்திர்ர்ற்கு ஒரு ஆண்
ஒரு குறிப்பிட்ட பிராண்ட் ஆடைகளுடன் ஆடைகளுடன்
சென்ட் போட்டுவந்தாலோ,அல்லது
ஜட்டி போட்டு வந்தாலோ ஒரு வெட்கம்
மானத்தை விட்டுவிட்டு அவனை அழைப்பதுபோல்
விளம்பரம்கள் வருவதை எந்த பெண் அமைப்பாவது
எதிர்த்துள்ளதா என்றால் இல்லை
இன்று உலகில் வலம் வரும்
அனைத்து விளம்பரங்களும்
திரைப்படங்களும் பெண்களை
இழிவு செய்தும் அவர்களை
துய்க்கும் பொருட்களாகவும்
சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதை
நடுநிலை எண்ணம் கொண்ட
மனிதர்களால் மறுக்கமுடியாது .
அழகி போட்டி என்று நாகரீகம் என்ற பெயரில்
விளம்பர நிறுவனங்கள் விரிக்கும்
சதி வலையில் வீழ்ந்து அரைகுறை
ஆண்களும் பெண்களும் சேர்ந்து
எந்த விதத்தில் ஆண்கள் அவர்களுக்கு
மதிப்பு அளிக்கிறார்கள் என்பதைகூட
உணர்ந்து கொள்ள இயலாத நிலையில்
பெண் சமூகம் கவர்ச்சிக்கும்,
பணத்திற்கும், புகழுக்கும் அடிமையாகி கிடக்கிறது.
இந்நிலையில் பெண்கள் தங்களை
ஆண்கள் சமூகம் பலவிதமாக பயன்படுத்த
அனுமதித்துவிட்டு மேடைகளில் ஆண்வர்க்கம்
மீது குற்றம் சாட்டுவது கேலிக்குரியது.
No comments:
Post a Comment