Sunday, June 14, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே-முப்பது மூன்று மடங்கானபிறகும் நிலை கெட்டிருப்பது -ஏன்? .

நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை
நினைத்துவிட்டால் -(மகாகவி பாரதி )

நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால்
என்று ஏழு பாடல்களை பாடினான்
முப்பது கோடி முகங்களை நினைத்து பாரதி அன்று
நான் பாட வந்தேன் 110 கோடி முகங்களை
நினைத்து மனம் வெதும்பி இன்று .

நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட சுயநல அரசியல்வாதிகளை
நினைத்துவிட்டால் –
கெஞ்சினால் மிஞ்சுவார் ,மிஞ்சினால் கெஞ்சுவார்
ஒவ்வொரு தேர்தலின் போதும் நம் கையில்
உள்ள ஓட்டுகளை சில இலவசங்களை காட்டி
அவர்கள்வசம் பறிககும்வரை

விலைவாசி உயர்வுக்கு
பணவீக்கம் தான் காரணம் என்பார் .
நடவடிக்கை எடுத்துவிட்டேன்
நாளையே விலைவாசி குறைந்துவிடும் என்பார்
என்ன இன்னும் குறையவில்லையே என்று கேட்டால்
புதியதாக ஏதாவது புளுகு மூட்டையை அவிழ்த்து விடுவார்
அல்லது இதற்க்கு முந்தைய ஆட்சியினரின்
தவறான கொள்கைகளே என்று சொல்லி தப்பிக்க பார்ப்பார் .

அதற்கடுத்த நாள் விலைவாசியை கண்டித்து
ஒரு நாள் கடையடைப்பு என்றறிவிப்பார்
அதற்க்கு ஒத்துழைக்காத எதிர்கட்சிகளின் கடைகளை
சமூகநீதி காக்கும் சமூக விரோதிகளைக்கொண்டு
அடித்து நொறுக்குவார் .
அந்த பழியை அவர்கள் மேலேயே சுமத்துவார் ;
மாறி மாறி அரசியல் கட்சிகள் நடத்தும்
விலைவாசி போராட்டம் ,சாலை மறியல் போராட்டம்
,என அரங்கேற்றுவார்கள் . விலைவாசி
உயர்ந்துகொண்டு போகும்போது பெட்ரோல்
டீசல் விலையை உயர்த்தி இன்னும்
விலைவாசி உயர்ந்திட வழி வகுப்பார் .

பேருந்துகள் ஓடாமல் நோயுற்றவர்களும்
,மாணவர்களும் ,பணிக்கு செல்பவர்களும்
இன்னலுக்கு ஆளாவதை பற்றி
அவர்களுக்கு கவலையில்லை .
ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால்
நாங்கள் உங்களுக்காகத்தான் போராடுகிறோம்
என்று விளக்கம் சொல்வார்
.பிறகு இவர்களே விடுவார்கள் அறிக்கை -
இவர்களின் போராட்டம் வெற்றி என்றும்
அவர்களின் போராட்டம் பிசுபிசுப்பு என்று .

சிலைகளை வைக்க பல காலம் நடத்துவார்
போராட்டம் வன்முறை வெறிஆட்டங்களில்
போகும் பல உயிர்கள் .ஈவிரக்கமின்றி .
தியாகிகளின் பட்டியலில் அவர்களின் பெயரும் சேர்க்கப்படும்
அத்துடன் இந்த பிரச்சினை தீர்ந்ததா என்றால் இல்லை -
வைத்து விட்ட சிலையை எதோ ஒரு சிலர்
இது ஜனநாயக நாடாயிற்றே என்று நினைத்து
நமக்கு பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்று
நம்பி வைதாலும் போச்சு ,வாழ்த்தினாலும் போச்சு
சிலையை உடைத்தாலும் போச்சு
வெடித்திடும் கலவரம் மீண்டும் வன்முறை

இப்படி எதெர்க்கேடுத்தாலும் போராட்டம் மறியல்
எதற்கெடுத்தாலும் வன்முறை
என்னதான் செய்வார்கள் தமிழ் நாட்டு மக்கள்
.எல்லாவற்றையும் மறக்க திரைப்படத்திற்கு போனால்
அதிலும் வக்கிரமான அசிங்கமான
அருவருக்கத்தக்க வன்முறை காட்சிகள் .
ஒரு ஆளை 2o பேர் சேர்ந்து அடித்து துவைப்பதும்
சிறிது நேரம் கழித்து அவன் எழுந்து அத்தனை பேரையும்
தனி ஆளாக அடித்து நொறுக்குவதையும்தான்
அங்கும் பார்க்கவேண்டும்

வீட்டிற்குள் நுழைந்தால் தொலைகாட்சி பெட்டிகளிலும்
அதே காட்சிகள்தான் .சினிமாவில் கண்ட
அதே காட்சிகளுடன் பெண்கள் பெண்ணினத்தை
அடிமைப்படுத்தும் கொச்சைபடுத்தும்
அசிங்கப்படுத்தும் .அவமானபடுத்தும் .
வக்கிரமான உறவுகளை நியாயப்படுத்தும்
.நாளுக்குநாள் விதவிதமான வன்முறைகளையும்
.அமங்கலமான காட்சிகளை தான் காண முடியும் .
வேறு அலைவரிசைகளில் மேலே குறிப்பிட்ட காட்சிகளில்
நடித்த அதே மாதர்குலம் அவர்கள் மீது
நடக்கும் வன்முறைகள் பற்றி பட்டிமன்றம் நடத்தும்
கூத்தையும் ரசிக்கலாம் .
இத்தோடு விட்டார்களா இன்னும் கேளுங்கள்

ஐந்து ருபாய் டூத் பேஸ்ட் ஐம்பத்து ருபாய்க்கு
விற்க வழி செய்யும் விளம்பரங்களையும் .
அயிந்து பைசா கோலி மிட்டாயை கவர்ச்சியான
கவரில் போட்டு ஐந்து ரூபாய்க்கு
விற்கும் மோசடியையும்
சிவப்பாக்கும் கிரீம் என்று 20 பைசா பசையை
200 ருபாய் அளவிற்கு விற்கும் மோசடியையும்
அதை பிரபலபடுத்த உடலை பலகோணங்களில்
ஆபாசமாக காட்டி ஆடும் குத்தாட்டங்களை அரங்கேற்றி
அதில் வெற்றி பெறுபவர்களை தேர்ந்தெடுக்க
செல் போன் நிறுவனங்களுடன்
கூட்டு சேர்ந்து கொண்டு கோடிகளைகுவிக்கும்
விளம்பரதாரர்களின் நிகழ்ச்சிகளும் இதில் அடங்கும் .
இதோடு விட்டார்களா இன்னும்
சற்று பொறுமையுடன் கேளுங்கள்

உடல்நலத்துக்கு ஒவ்வாத வித விதமான
நிறம் கலந்த அமிலங்களை நம் நாட்டில் உள்ள
நிலத்தடி நீர் முழுவதையும் உறிஞ்சி
எடுக்கப்பட்ட தண்ணீர் கலந்து
கவர்ச்சியான பாட்டில்களில் நிரப்பி ,
நம் நாட்டு மக்கள் பலமுறை ஏமாந்து
இனிமேல் ஏமாறுவதற்கு ஒன்றுமில்லை
என்ற நிலையில் கவர்ச்சியான
நடிகர் நடிகைகளை கொண்டு நம்முன் நிறுத்தி
விளம்பரம் செய்து கோடி கோடியாய் மூட்டை
கட்டி கொண்டு போகும் பன்னாடை
பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்கள் என்று
பட்டியலிட ஆரம்பித்தால் இணைய தளத்தில்
இடம் இல்லாத தளம் ஆகிவிடும் என்ற
இத்தோடு நிறுத்திகொள்கிறேன்
ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம் போல ;

என்னதான் செய்வார்கள் இந்தியா மக்கள்
அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டு மக்கள்
கவர்ச்சிக்கு அடிமையாகி வாய்ஜால
பேச்சுக்கு மயங்கி மதிஇழந்து நாட்டில்
தினம் தினம் நடக்கும் வன்முறைகளைக்கண்டு
பயந்துபோய் மருண்டுபோய் நாட்டில்
எங்கு சென்றாலும் தலைவிரித்தாடும்
லஞ்ச ஊழலை தட்டி கேட்க முடியாமலும்
அக்கிரமங்களை தடுக்க இயலாமலும்
வீட்டிலேயும் வெளியிலேயும் எந்தவிதமான
எதிர்ப்பையும் காட்ட முடியாமலும்
மனம் வெதும்பி மன நோயாளிகளாக வாழுகின்றனர் ;.

மனதில் அமைதியில்லை சமூகத்தில் அமைதிஇல்லை
நேர்மை வழியில் செல்ல நினைப்பவர்க்கு பாதுகாப்பில்லை
சிலர் போதையில் மூழ்கிவிட்டனர்.
சிலர் குடியில் தன்னை இழந்துவிட்டனர்
சிலர் கேளிக்கைகளில் கிடக்கின்றனர்
சிலர் அடிதடியில் இறங்குகின்றனர்
சிலர் காலம் ஒரு நாள் மாறும் என்று
எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு
கடவுளே என்று காலம் தள்ளுகின்றனர்
வேறு என்ன செய்வது ?

வறுமையின் காரணமாக
மானத்தையும் இழக்கும் ஒரு கூட்டம்
ஒரு புறம் ஆடம்பர வாழ்க்கை வாழ
அதே செயலை செய்யும் ஒரு கூட்டம் மறுபுறம்
ஒருபுறம் மிருகங்களின் கிட்னியை சாப்பிடும்
அசைவ பிரியர்கள் கூட்டம்
மறுபுறம் குடும்பம் நடத்த வாங்கிய
கடனை அடைக்க உதவி செய்வதாக
அப்பாவி மக்களின் கிட்னிகளை திருடி
மோசடி செய்து கோடிகளை குவிக்கும்
உலகளாவிய அரக்கர் கூட்டம்

இதனாலன்றோ கல்வியில்
சிறந்த தமிழ்நாடு மக்கள்
கலவியில் நாட்டம் கொண்டு
அயிட்ஸ் நோய்க்கு இலக்காகின்றனரோ
மனம் குழம்பிய நிலையில்
செய்வதறியாது யார் எதை
சொன்னாலும் செய்தாலும் அதை அப்படியே
உண்மையென்று நம்பி எடுப்பார்
கைபில்லையாகி மோசம் போகின்றாரோ
ஐயோ பட்டியலிட பட்டியலிட மனம் பதறுதையா
எனவே இத்தோடு விட்டுவிடுகிறேன்
இப்போதைக்கு இது போதும்

No comments: