Wednesday, October 8, 2008

SIVAPPAYEE-KARUPPAYE

கருப்பாயீ: பெரியாரை ஆத்திகர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?
சிவப்பாயி :அவர் ஆத்திகர்கள் காரணமே தெரியாமல் கடைப்பிடிக்கும் நம்பிக்கைகளை எதிர்த்து மட்டுமல்லாமல் மற்ற மக்களையும் பயமுறுத்தி அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்ததையும் எதிர்த்தார்.கடவுளின் பெயரால் அப்பாவி மக்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளையும் எதிர்த்தார்.அதனால் மக்கள் தெளிவு பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கினார்கள். பன்னெடுங்காலமாக எந்த எதிர்ப்பும் இல்லாமல் பிறரை சுரண்டி வந்த கூட்டத்தினர்தான் அவரை எதிர்த்தனர். பாமர மக்கள் மற்றும் சராசரி மனிதர்கள் அவரை எதிர்த்து எந்த பிரச்சினையும் செய்தது கிடையாது.மக்களை திசை திருப்பவே அவர் கடவுளுக்கு எதிரானவர் என்று பிரச்சாரம் செய்தார்கள் ஆனால் அது எடுபடாமல் பாதிக்கப்பட்ட மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு பெற்றார்கள்.
கருப்பாயீ:அது சரி. அவர் கடவுளை வணங்குபவன் முட்டாள் என்று சொல்லியிருக்கிறாரே?அது மட்டும் சரியா?
சிவப்பாயீ: அவர் சொல்லியது ஒரு வகையில் முற்றிலும் சரி.
கருப்பாயீ: எப்படி.?
சிவப்பாயீ:ஆதி சங்கரர் என்ன சொல்லியிருக்கிறார். அஹம் பிரம்மாஸ்மி.அதன் பொருள் என்ன? நானே பிரம்மம் அந்த கொள்கைப்படி எல்லோரும் ப்ரம்மம்கள். அதாவது கடவுள்கள். அப்படி இருக்கும்போது சிலைகளை வைத்து ஏன் கடவுள் என்று தனியாக வணங்கவேண்டும் ? மனிதர்கள் ஒருவருக்கொருவர் சரிசமமாக இருப்பதால் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிக்கொண்டு அன்போடு உதவிகொண்டு வாழலாமே.உருவங்கள் வேறேயோழிய உள்ள இருக்கும் ஆத்மா ஒன்றுதானே .அதையும் ஆதிசங்கரர் சொல்லியிருக்கிறார். ஆனால் அவ்வாறு செய்யாமல் கடவுள் என்று சிலைகளை நிறுவி மனிதர்கள் செய்வதைபோல் எல்லாவற்றையும் அந்த சிலைகளுக்கு பூஜை செய்ய வேண்டும் ?எதற்கு கோயில் கதவுகளை பூட்ட வேண்டும்?கடவுளுக்கு தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள தெரியாதா? ஆம் வைக்கும் பொருட்களை உண்ணாத கடவுளுக்கு ஏன் படைக்கவேண்டும்? மனிதர்கள் பட்டினியால் வாடும்போது அதை நீக்க வழி செய்யாமால் இருப்பது சரியா என்ற கேள்விகளை எழுப்பினார். எனவே கடவுளை மற மனிதனை நினை. என்றெல்லாம் அவர் காரசாரமாக கருத்துகளை தெரிவித்தார்.
சிவவாக்கியர் என்ன சொல்லியிருக்கிறார். நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில் என்று. தொண்டரடிபொடி ஆழ்வார் இறைவனை மாசற்றார் மனதுள்ளானை என்றுதானே.
திருமூலர் திருமந்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறார்
ஊனுக்கும் ஈசன் ஒளிந்திருந்தானே என்று.
கடவுள் என்ற பெயரால் நடந்துவந்த ஒழுங்கீனங்களை அவர் கடுமையாக சாடினார்.என்பதே உண்மை.
இப்போதும் அவர் கொள்கைகளை சரியாக புரிந்துகொள்ளாமல் பலரும் அவரை எதிக்கின்றனர். கடவுளின் உண்மைத்தன்மை வேறு.
அதை உணர்ந்துகொள்ளும் வழிகளும் ஏராளம்.
பாரதி அறிவே தெய்வம் என்றான்.
அறிவிற்கு ஒவ்வாதவற்றை ஏற்று கொள்ளாதீர்கள் என்று பெரியார் வலியுறுத்தினார்.. .
உபநிடதங்களும் எதையும் ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே ஏற்று கொள்ளாதீர்கள் என்றுதான் சொல்கிறது.
எந்த வழி நல்ல வழி என்பதை அவரவர் அறிவிற்கும் மன முதிர்ச்சிக்கும் ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்து உண்மையை உணர்ந்துகொள்ள முற்படவேண்டும்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார் திருவள்ளுவர்.
அப்படியிருக்க கடவுளின் சன்னதியில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பாகுபாடு காட்டுவதை கடவுளே ஏற்றுகொண்டது கிடையாது.என்பதற்கு பல சான்றுகள் எல்லா மத நூல்களிலும் இருக்கின்றன.
அதைநடைமுறைபடுத்தினால் எந்த பிரச்சினைகளும் இருக்காது.மக்களிடையே பாகுபாடு வராது.
ஆனால் இன்னும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல் தேவையில்லாமல் வெறுப்பையும் விரோதத்தையும் வளர்த்துகொண்டுவருகின்றனர் என்பதுதான் கசப்பான உண்மை.
ஆத்திகர்கள் அவர்கள் வழியில் செல்லட்டும்,இறைவன் சன்னதிக்கு எந்த வேறுபாடுகளுமின்றி.

நாத்திகர்கள் அவர்களின் சிந்தனைகளை மக்களுக்கு அமைதியான வழியில் யார் மனமும் புண்படாத வகையில் பிராச்சாரம் செய்துகொள்ளட்டும்.
அதுவே அமைதிக்கு வழி.
Posted by Picasa

No comments: