மைனா: என்ன டல்லா இருக்கிறே?
குருவி: எனக்கு ஒண்ணும் இல்லப்பா
மைனா:சும்மா சொல்லு. மனதில் இருப்பதை வெளியில் சொன்னாதானே பாரம் இறங்கும்;
குருவி: நான் குடியிருக்கேனே அந்த வீட்டுக்காரருக்குத்தான் பிரச்சினை.
மைனா: அவர் ரொம்ப நல்ல மனிதராயிற்றே
குருவி:இந்த காலத்தில் நல்ல மனிதர்களுக்குத்தான் மற்றவர்களால் எப்போதும் தொல்லை வருகிறதே
மைனா:அவர்தான் யார் வம்புக்கும் போகமாட்டார்.வம்பு பண்றவங்களையும் போனால் போகட்டும் என்று விட்டுவிடுவார்.எனக்கு நன்றாக தெரியுமே.அது சரி அவருக்கு யாரால் பிரச்சினை?
குருவி: வேறு யாரு அமரிக்காகாரனா பிரச்சினை பண்ணுவான்? எல்லாம் அண்டை வீட்டு காரன்தான்.சும்மாயிருந்தாலும் சண்டைக்கு இழுப்பதே பொழுதுபோக்காக கொண்டவன்.
மைனா: இது உலகளாவிய பிரச்சினை ஆயிற்றே.
குருவி: நம் மாநிலத்தை எடுத்துகொண்டால் கேரளா,கர்நாடகா,ஆந்திரா,ஆகிய மாநிலங்களோடு நதி நீர் பிரச்சினை.அண்டை நாடான இலங்கையோடு மீனவர் மற்றும் கடத்தல்,மற்றும் ஈழ தமிழர் பிரச்சினை .இப்படி தீர்க்கமுடியாத பிரச்சினைகள் ஏராளம்.நம் நாட்டை எடுத்துகொண்டால் வங்கதேசம்,பாகிஸ்தான்,நேபாளம்,இலங்கை என்று ஒரு அண்டை நாட்டுடன் சுமுகமான உறவுகள் கிடையாது . எல்லாம் ஒரு குண்டு போட்டால் இருக்கின்ற இடம் தெரியாமல் போய்விடும்.அனால் அவைகள் நம்மை எல்லாவிதத்திலும் சீண்டி பார்ப்பதுடன் நமக்கு ஓயாமல் துன்பம் கொடுத்து கொண்டிருக்கின்றன.என்ன செய்வது.அதுபோல்தான் இதுவும்.இருந்தாலும் இது சின்ன பிரச்சினையாக இருப்பதால் ஏதாவது ஒரு வழி சொல்வாய் என்று உன்னிடம் வந்தேன்
.மைனா:ஒரு பழமொழி உண்டு. நீ உன் நண்பர்களை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் உன் பக்கத்து வீட்டுக்காரனை இறைவன்தான் தேர்ந்தெடுக்கிறான் என்று.அது என்னவோ தெரியவில்லை முதலில் நண்பர்களாக இருக்கும் பக்கத்து வீட்டுகாரர்கள் சில காலத்திற்கு பிறகு பரம எதிரிகளாக மாறிவிடுகிரார்களே அதுதான் எனக்கு புரியவில்லை.?
குருவி:உனக்கே புரியவில்லை என்றால் எனக்கு மட்டும் எங்கே புரியப்போகிறது?
மைனா: இந்த பிரச்சினையை தீர்க்க 3 வழிகள் உள்ளது.1.பக்கத்து வீட்டு காரனிடம் நேராக இது பற்றி பேசிவிடுவது.
குருவி:அது முடியாது.குப்பை போடுவதை தினமும் அவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். அதை ஒருநாள் கூட கண்டித்ததில்லை. என் சில நாட்களில் அவனே கொண்டு குப்பைகளை கொட்டுவான். இப்படியிருக்க அவனிடம் பேசி என்ன பயன் ஏற்ப்பட போகிறது,நீயே சொல்லு.. அவனை சரி கட்டினாலும் அவன் வீட்டில் இருப்பவர்கள் எந்த சட்ட திட்டத்திற்கும் கட்டுப்படாத பிறர் சொல்லை மதிக்காத உத்தம பிறவிகள்.அதனால்தான் எங்கள் வீட்டுக்காரர் அவர்கள் உறவே வேண்டாம் என்று சும்மா இருந்துவிட்டார்.
மைனா :: இரண்டாவது வழி.திருவள்ளுவர் காட்டும் வழி.
குருவி: அது என்ன?
மைனா:அவர் ஒரு குறளில் 'இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்' உங்கள் வீட்டு குப்பையை சுத்தம் செய்யும்போது அவர்களின் குப்பையையும் சேர்த்து அப்புறபடுத்துதல்.அவ்வாறு செய்தால் அவர்கள் குப்பையை உங்கள் வீட்டின் எதிரில் கொட்டமாட்டார்கள்
.குருவி: எங்கள் வீட்டுக்காரர் தன் வீட்டின் எதிரில் குப்பையே கொட்டுவது கிடையாதே? அப்படி இருக்கும்போது எப்படி அவர்கள் கொட்டிய குப்பையை வாரி கொட்ட முடியும்.இது இன்னும் அவர்கள் திமிரை அதிகப்படுத்தும் அல்லவா?இது சரிப்படாது.அவர்களுக்குத்தான் மனசாட்சியே கிடையாதே
மைனா:இவர்களுக்கு அடி உதைதான் சரி.ஆனால் உங்கள் வீட்டுக்காரர் பரம சாதுவாயிற்றே அப்படியானால் அதற்க்கு மற்றொரு ஒரு வழி உள்ளது.
குருவி:அது என்ன வழி
மைனா: உன் வீட்டுக்காரர் தினமும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்போது,இறைவா இந்த பக்கத்து வீட்டு ஜனங்களுக்கு நல்ல புத்தி கொடுக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்ய சொல்லு. அது நிச்சயம் பலனளிக்கும்.
குருவி:அதைத்தான் அவர் செய்ய தொடங்கினார். இறைவன் எதையும் சரியாக செய்வான் என்ற நம்பிக்கை அவர்க்கு உண்டு. அதற்காக அவர் காத்துகொண்டிருக்கிறார். அவர் சும்மா இருப்பதால் அவர்களின் ஆணவம் எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது.இருந்தாலும் எதற்கும் ஒரு முடிவு நிச்சயம் உண்டு.அக்கிரமக்காரர்களின் வாழ்வு நீண்ட நாளைக்கு நீடிக்காது என்பது உலகம் அறிந்த உண்மை.
மைனா: எப்போதும் இறைவனை நம்புபவர்களை அவன் எப்படியாவது அவர்களை தொல்லையிலிருந்து விடுவிப்பது நிச்சயம். அதை அவரவர் அனுபவங்களிலிருந்துதான் உணரவேண்டும்.

No comments:
Post a Comment