மனிதர்களே மதம் மாறி பயனில்லை.
மனம் மாறுங்கள்
ஒரு மனிதன் பாடுபட்டு ஒரு அழகான சிலையை செதுக்கி,உருவாக்கி ,பார்த்து ரசித்து மகிழ்கிறான்.அவனை போன்றே ஒத்த கருத்துடைய கலையை ஆர்வத்தோடு ரசிக்கக்கூடிய பக்குவமுடைய மனிதர்கள் சிலையை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.ஏனென்றால் ரசிப்பது ஒரு கலை.மனதில் விருப்பு வெறுப்பு அற்றவர்களால் மட்டுமே கலைகளை ரசிக்க முடியும்.
ஆனால் மற்றொரு மனிதன் பாடுபட்டு வடித்த சிலையை கண நேரத்தில் உடைத்து நொறுக்குகிரானே அது ஏன்?.
அதுதான் குறுகிய கண்ணோட்டம்.அந்த எண்ணம் இருந்தால் அவர்களும் நன்றாக இருக்க மாட்டார்கள் மற்றவர்களையும் நன்றாக இருக்க விடமாட்டார்கள்.
இந்த குறுகிய கண்ணோட்டம் மதவாதிகளுக்கு அபரிமிதமாகவே இருக்கிறது.
கலை மதங்களுக்கு அப்பாற்பட்டது.
அதை ரசிக்க மதம் தேவையில்லை
நல்ல மனம் இருந்தால் போதும்.
இந்த உலகத்தில் மதத்தின் பெயரால் பல்லாயிரம் ஆண்டுகளாக
பல போர்கள் நடந்து பல்லாயிரகணக்கான மக்கள் மாண்ட
பின்னரும் அந்த தீ அணையவில்லை.சுயநலம் கொண்ட,மதவெறி பிடித்த தனி மனிதர்கள் இணைந்த ஒரு சிறு கூட்டம் பெரும்பாலான அமைதியை விரும்பும் மக்களை மூளை சலவை செய்தும், மிரட்டியும், ஆசை காட்டியும்,துன்புறுத்தியும் தங்களின் வக்கிர ஆசைகளை நிறைவேற்றி கொழுத்துக்கொண்டு சுக போக வாழ்வில் திளைத்து கொண்டிருக்கின்றன. கடவுளையே பார்த்தறியாத இந்த அயோக்கியர்கள் இவர்கள், கடவுளின் உண்மை தன்மையை உணர்ந்தறியாத இவர்கள் கடவுளை பற்றி அப்பாவி மக்களுக்கும்,பாமரர்களுக்கும், படித்தவர்களுக்கும் அவர் இப்படி சொன்னார்.இவர் இப்படி வேத புத்தகங்களில் எழுதி வைத்துள்ளார் என்றெல்லாம் கதை விட்டுக்கொண்டு சுக போக வழக்கை வாழ்ந்து கொண்டுவருகின்றனர்.இதற்க்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல.கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்பவர்களும் கடவுளை நம்புபவர்களை எதிர்ப்பது மட்டுந்தான் தங்கள் கொள்கை என்ற போக்கில் அவர்களுடன் மோதிக்கொண்டு காலத்தை போக்குகின்றனர். இந்த இரு கோஷ்டிகளுக்கு மத்தியில் மனிதர்கள் மாட்டிக்கொண்டு உண்மை நிலையை உணர முடியாமல் தவித்துகொண்டிருக்கின்றனர்..இவர்கள் மற்றவர்களுக்கு போதிப்பது எளிமை,அன்பு,பக்தி. ஆனால் இவர்கள் சுக போகத்தில் வாழ்வது ஊராரில் உழைப்பில் அட்டை போல் உறிஞ்சி வாழும் அற்ப பதர்கள்.உதட்டளவில் உதிர்ப்பது அன்பு. உள்ளத்தளவில் உள்ளது ஒருவருக்கொருவர் மீது பொங்கி எரியும் மதவெறி,
பேசுவது பிறப்பால் அனைவரும் ஒன்று, அனைவரும், ஆண்டவனுடைய பிள்ளைகள்,அனைவரும் சகோதரர்கள்,ஆண்டவனின் முன் அனைவரும் சமம்
ஆனால் உலகில் நடப்பது என்ன என்று அனைவருக்கும் தெரியும்
இவைகளை எல்லாம் மாற்றக்கூடிய ஒரே மந்திரம்
அன்பு ஒன்றுதான்
அது உலகம் முழுவதும் அனைவரின் மனங்களிலும் புகுந்து கொண்டு இவ்வுலகை இன்ப மயமாக்கும் நாளை நம்மையெல்லாம் படைத்த இறைவன் உருவாக்குவாராக
No comments:
Post a Comment