Wednesday, October 1, 2008

காக்கை சிறகினிலே நந்தலாலா

காக்கை சிறகினிலே நந்தலாலா நிந்தன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா என்றான் தெய்வ கவிஞன் பாரதி

காகம் என்றால் கருமை நிறம் மட்டுமா ?
மனித இனம் தோன்றிய நாள் முதல் மனிதனுடன் கூடவே வாழ்ந்து வருவது காகம்
முன்னோர்களுக்கு பிண்டம் வைக்க காகத்தைதான் இன்றும் அழைக்கின்றோம் அல்லவா !
ஏனென்றால் முன்னோர்கள் காகம் உருவில் அந்த உணவை உண்பதாக தொன்று தொட்டு நிலவி வரும் நம்பிக்கையன்றோ !
காலையில் சூரிய உதயத்திற்கு முன் கா கா எனக்கூவி அனைவரையும் எழுப்புவது காகமல்லவா
குழந்தைகளுக்கு சோறு ஊட்ட்ட காகத்தை கூப்பிட அதுவும் தத்தி தத்தி வந்து எதிரில் நிற்ப்பது மட்டுமல்லாமல் மற்ற காகங்களையும் கூப்பிடுவதே ஒரு அழகுதான்
நாம் ஒரு காகத்திற்கு உணவிட்டால் அது தான் மட்டும் அந்த உணவை உண்ணாது மற்ற காகங்களையும் கூவி அழைத்து கூடி மகிழ்ந்து உண்ணும் பாங்கே தனி
காலையில் வீட்டின் வாயிலில் முன்பு அரிசி மாவினால் கோலம் போட்டால் அதை போட்டு முடியும் வரை காத்திருந்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தபின் அனைத்து காகங்களும் கோலத்தை சுற்றி நின்று தத்தி குதித்து குதித்து அந்த மாவினை கொத்தி தின்பதும் ஓர் அழகு .அதை ரசித்தவர்களுக்குதான் தெரியும்

காகம் வடையை கவ்வி சென்று குள்ள நரியிடம் ஏமாந்த கதை காலம் காலமாக குழந்தைகளிடம் சொல்லப்படும் கதை
ராமாயணத்திலே காக வடிவிலே காகாசுரன் என்னும் அரக்கன் சீதையை துன்புறுத்தியபோது ராமபிரான் தர்ப்பை புல்லினால் தண்டித்ததால் ஒரு கண்ணை இழந்த காரணத்தினால் காகங்கள் ஒரு கண்ணால் பார்க்கின்றன என்ற புராண செய்தியும் உண்டு
காகம் கடலையை போட்டாலும் தின்னும் எந்த உயிரின் குடலை போட்டாலும் தின்னும்
இனிப்பையும் தின்னும் காரத்தையும் தின்னும்
இதுதான் அதுதான் என்னாது எதைபோட்டாலும் தின்னும் ஆச்சரியம் ;.
எல்லா கழிவுகளையும் உண்டு சுட்ட்ருபுஅத்தை சுத்தப்படுத்தும் காக்கை நீரினால் தன் உடலையும் சுத்தப்படுத்தும் நேர்த்தியே நேர்த்தி .அதை பார்த்தவர்களுக்கே தெரியும் ;
தெரு விளக்கு மின் கம்ப ஒயர்களின் மீது காகங்கள் வரிசையாக அமர்ந்து கும்பலாக குரல் எழுப்புவது கண்கொள்ளா காட்சி
சில சமயம் ஒரு காகம் மின்சாரம் தாக்கி மாண்டு கீழே விழும்போது மற்ற காகங்கள் கும்பலாக சுற்றி நின்று வந்து கதறி குரல் எழுப்புவது மனதை நெகிழ வைக்கும் காட்சி
புல்லை மேயும் மாட்டின் மீது ஒயிலாக அமர்ந்து கொண்டு அதன் உடம்பில் மேல் உள்ள பேன்களை பிடித்து தின்னும் காகம் ;
மாட்டின் மீது உள்ள புண்களையும் குத்தும் காகம்
அதனாலன்றோ எழுந்தது காக்கைக்கு தெரியுமோ எருதின் வலி என்ற பழமொழி

தெருக்குழாய் நின்றுகொண்டு சொட்டு சொட்டாய் நீரை காகம் பருகுவது கண் கொள்ளா காட்சி .
காகம் வீட்டின் வாயிலில் நின்று கரைந்தால் அன்று நிச்சயம் விருந்தினர்கள் வருவார்கள் என்பது நெடு நாளைய நம்பிக்கை
பலயுகம் கண்ட காக புஜண்ட முனி வெள்ளை காக்கை உருவில் இமயமலையில் இன்னும் வசிப்பதாக சித்தர் புராணம் கூறுகிறது
அகத்திய முனி கமண்டலத்தில் காவிரி நதியை தமிழ் நாட்டில் பாயவைக்க விநாயக பெருமான் வந்தது காக உருவிலன்ரோ
வேப்பம் பழத்தை தின்றுவிட்டு வேப்பம் கொட்டையை செல்லுகின்ற இடங்களில் எல்லாம் எச்சத்துடன் இட்டு இலவசமாக மரம் நாடு விழாக்களை நடத்தும் காகத்திற்கு மனிதஇனம் நன்றி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை அவைகளை துன்புறுத்தாமல் இருந்தால் அதுவே போதும்
பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக மனிதர்களோடு வாழும் காகத்தை பாசத்தோடு பார்க்க கற்றுகொள்ளுங்கள்
சுற்றுபுறத்தை சுத்தமாக வைக்க உதவும் காகத்தை அன்போடு நேசியுங்கள் .
இவ்வளவு சரித்திரம் உள்ள காகம் மக்களை ஆட்டி படைக்கும் சனீஸ்வர பகவானின் வாகனமாக சநீஸ்வரனுடன் சேர்த்து வணங்கப்படுவது சால சிறப்பன்றோ .

No comments: