வெற்றிக்கு வழி
தோல்வி என்பது என்ன ?
எடுத்த காரியம் முடியவில்லை என்றுதானே அர்த்தம் ;
அதற்காக ஏன் வருந்தவேண்டும்?
ஏன் கவலைப்படவேண்டும்?.
வீணாக ஏன் மனதை குழப்பி கொள்ள வேண்டும்?
ஏன் தவறான முடிவுகளை மேற்க்கொள்ளவேண்டும் ?
எடுத்த காரியம் என்ன காரணத்தினால் முடியவில்லை
என்பதை ஆராய்ந்து அதை சரி செய்து செயல்படுவதே வெற்றிக்கு வழி வகுக்கும்
அதைவிடுத்து அப்படியே இடிந்து போய் உட்கார்ந்துவிடுவதும்
தற்க்கொலைக்கு முயற்சிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும் ;
கடவுள் ஒவ்வொரு மனிதரையும் ஒவ்வொரு
குறிக்கோளை அடையவே படைத்திருக்கிறார் ;.
அதை அறிந்துகொண்டு அதை செயல்படுத்தினால்
நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக விளங்கும் ;.
வெற்றி பெற்றால் மகிழ்ச்சி அடைவதும்
தோல்வி கண்டால் துயரில் மூழ்குவதும் மனத்தின் இருவேறு நிலைகளே .
ஆனால் உண்மையில் மகிழ்ச்சி என்றோ துக்கம் என்றோ எதுவும் இல்லை .
இதை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டால் வாழ்வில்
இன்பத்துக்கும் அமைதிக்கும் பஞ்சமில்லை
உலகில் கணக்கிலடங்கா பொருட்கள் உள்ளன
எல்லாவற்றையும் பெற நாம் ஆசைப்படுவதில்லை
எதோ சிலவற்றின் மீது மட்டும் ஆசை வைக்கின்றோம்
மற்றவைகளை பற்றி நாம் கண்டு கொள்வது கூட கிடையாது
ஆசைப்படும் பொருளை அடைந்து விட்டால்
மனம் வேறு பொருள் மீது நாட்டம் கொள்ள தொடங்கிவிடுகிறது
பிறகு நாம் அந்த பொருளை ஏறெடுத்து கூட பார்ப்பதில்லை
ஆசைப்படும் பொருள் கிடைக்காவிட்டால்
அதை அடைய பலவிதமான முயற்சிகள் செய்கிறோம் ;
அதற்க்கு தடையாக இருப்போரை வெறுக்கிறோம் ;.
அவர்களை அழிக்க கூட முயற்சிகள் செய்கிறோம் ;.
இதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் ;
ஆசைகளே எல்லாவிதமான துன்பங்களுக்கும்
அடிப்படை காரணமாக இருப்பதால்
நம்மை ஆசைகளிலிருந்து காத்துக்கொண்டால்
எந்தவிதமான துன்பமும் நம்மை அணுகாது .
No comments:
Post a Comment