METAL FOIL ART-4
கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும் கந்தனே
உன்னை மறவேன்.
யாமிருக்க பயமேன்
என்று அண்டியவர்களை காப்பவன்
குன்றுபோல் குவிந்துள்ள
நம் வினைகளை
குன்றுதோறும் குடி கொண்ட
குமரனை துதித்தால்
குந்துமணி போல் காணாமல்
செய்திடுவான்
ஞான பண்டிதன்
அஞ்ஞானம் அகற்றுபவன்
பொருளை அளிப்பவன்
அருளை கூட்டுபவன்
அமரர் தலைவன்
அசுரர்களின் பகைவன்
அடியார்களின் துணைவன்
என்றும் அவன் பாதம் பணிவோம்
2 comments:
அருமை... நன்றி ஐயா...
நன்றி DD
Post a Comment