Thursday, November 8, 2012

சுற்றுப்புற சூழல் சீர்கேடு


சுற்றுப்புற சூழல் சீர்கேடு 

நாம் வாழும் இந்த உலகில் சுற்றுபுறத்தை
பாழ்படுத்தி விட்டோம். அதனால் நாம்
தொடர்ந்து பல துன்பங்களை அனுபவித்து வருகிறோம்.
துன்பம் நீங்க முயற்சிகளை மேற்கொள்ளுகிறோமே ஒழிய அதற்க்கான காரணங்களை தவிர்க்க நாம் அக்கறை காட்டுவதில்லை.

நாம் பயன்படுத்திவிட்டு வெளியில் வீசியெறியும்
சில பொருட்கள் பல ஆண்டுகளானாலும்
மக்கி மண்ணாக போவதில்லை
சில பொருட்கள் மக்குவதேஇல்லை
அவைகளில் பல நச்சு தன்மை கொண்டவை
அவைகள் அப்படியே இருந்துகொண்டு மனிதர்களுக்கும்,
விலங்குகளுக்கும் தீமைகளை விளைவித்துக்கொண்டிருக்கும்.

அப்படிப்பட்ட பொருட்களில் ப்ளாஸ்ட்டிக்கும்
 மின்சாதன கருவிகளும்.

இப்போதே அவற்றின் பாதிப்புகள் எல்லை மீறி விட்டது .
மனிதர்கள் இன்னும் விழிப்புணர்வு பெறாவிட்டால்
மனிதகுலம் அழிவை தான் சந்திக்க நேரும்.


பொருட்களின் மக்கும் காலம் குறித்த 
சில தகவல்கள் கீழே தரப்படுகின்றன. 






1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கத்துடன் பல தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா...