இதனால் எல்லோருக்கு தெரிவிப்பது என்னவெனில் நாங்கள் தனியாக தேர்தலில் போட்டியிட்டாலும் மத்திய அரசில் CMP அடிப்படையில் ஆட்சி செய்வதைபோல் கீழ்கண்ட பொதுவான கொள்கைகளை கடைபிடித்து வருகிறோம் என்பதை அனைத்து கட்சிகளுக்கும் தொண்டர்களுக்கும் நினைவு படுத்த விரும்புகிறோம்.
ஒன்று:தொண்டர்கள் அனைவரும்,கொடி கட்ட வேண்டும், கூட்டம் சேர்க்க வேண்டும், நிதி வசூலித்து தர வேண்டும், போராட்டங்களில் கலந்துகொண்டு உதை,சிறை உட்பட அனுபவிக்க தயாராக இருக்கவேண்டும்.தேர்தலின் போது கடுமையாக உழைத்து எங்களை ஜெயிக்க வைத்தால் நாங்கள் கோடிகளை குவித்து கொள்ளுவோம். மாறி மாறி ஒருவர் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் போட்டு அரசு நிதியை காலி . பண்ணுவோம்.நாங்கள் ஆட்சிக்கு வரும்போது எங்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளை பொய்யான வழக்குகள் என்று தள்ளிவிடுவோம்.
இரண்டு: நீங்கள் இதை செய்தால் உங்களுக்கு அனைத்தையும் இலவசமாக தருவோம்.தேர்தலின் போது இலவச பிரியாணி பொட்டலம், வோட்டு போட காந்தி படம், வீடு எரின்ச்சுபூனா துட்டு, வீடு இடிஞ்சுபோனா துட்டு,வேயில் காஞ்சா துட்டு, வெள்ளம் வந்தா துட்டு என அள்ளி விடுவோம்.
மேலும் அரசாங்க வேலைகள் அனைத்தையும்
தந்து உங்கள் பிழைப்புக்கு வழி செய்வோம். ஆனால் நீங்கள் மொத்த துட்டையும் டாஸ்மாக் கடையில் அழுதுவிட்டு அப்படியே வம்பு தும்பு எதுவும் செய்யாமல் வீட்டில போய் படுத்துவிட வேண்டும்.
மூன்று. நீங்கள் கொளுத்தும் வெயிலில் போராட்டம் ,உண்ணாவிரதம் முதலியவைகளை நடத்தவேண்டும். ஆனால் நாங்கள் குளு குளு காரில் வந்து கும்பிடு மட்டும் போட்டுவிட்டு போய்விடுவோம்.
நான்கு: எதுக்கும் கணக்கு கேட்கக்கூடாது கேட்டால் என்ன ஆகும் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.

5 comments:
Wow, very unique blog.
Fantastic pictures.
Please visit:
http://bali-digitalworld.blogspot.com
Keep blogging.
Have a nice day.
Thanks Mr John.
Thanks Mr John.
//ஆனால் நீங்கள் மொத்த துட்டையும் டாஸ்மாக் கடையில் அழுதுவிட்டு அப்படியே வம்பு தும்பு எதுவும் செய்யாமல் வீட்டில போய் படுத்துவிட வேண்டும்.//
வம்புதும்பு செய்தால் காவல் நிலையத்தில் படுக்கையா?
அங்கே போனாலும் இலவச சாப்பாடு கிடைக்கும்
கொஞ்சம் சில்லறையை தள்ளினால் வெளியில் கிடைக்கும் அனைத்துமே உள்ளேயே கிடைக்கும்.
கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு -அன்று
கையில் சில்லறை உள்ளோர்க்கு செல்லும் இடமெல்லாம் வரவேற்ப்பு.-இன்று
பணம் பாதாளம் வரை பாயும்-பழமொழி அன்று.
பணம் ஆட்சியையே கவிழ்த்துவிடும்/காப்பாற்றிவிடும்-இன்று
அன்று தமிழ் நாட்டில் இருந்தது மனசாட்சி
இன்று அரசோச்சுவது பொய் சாட்சி
கொடிகள் கட்டதான் தொண்டன்
கோடிகளை குவிக்கத்தான் தலைவன்.
அறிவுடையார் எல்லாம் உடையார்-அன்று
அடியாட்களை உடையார் எல்லாம் உடையார்-இன்று
Post a Comment