நாம் -உலகம் -இறைவன்
நாம் யார் ?
இந்த உலகம் என்றால் என்ன ?
நமக்கும் இந்த உலகத்திற்கும் இறைவனுக்கும் என்ன சம்பந்தம் ?
இந்த கேள்விகள் மனிதன் சிந்திக்க ஆரம்பித்த காலம் தொடங்கி இன்று வரை அவன் மனதை குடைந்து கொண்டிருக்கிறது
.விடைதெரிந்தவர்கள் சிந்திப்பதை விட்டு விட்டு மௌனமாகிவிட்டார்கள்
சிலர் தங்களுக்கு தெரிந்ததை இறைவனை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு வெளிப்படுத்தி விட்டு சென்றுள்ளார்கள் .
ஒன்றும் அறியாத பாமரர்களுக்கு காலப்போக்கில் அனுபவம் மூலம் உண்மையை அறிந்துகொள்ள ,சில தத்துவங்களையும் ,வழிபாடுகளையும் , வழிபாட்டு முறைகளையும் ,ஆலயங்களையும் ,ஏற்ப்படுத்தி சென்றுள்ளார்கள் .அவரவர் வாழும் இடத்திர்க்கேர்ப்ப ,கால சூழ்நிலைகளுக்கேர்ப்ப, அவரவர் கல்வி தகுதிக்கேற்ப திக்கேர்ப்ப ,,மனதின் முதிர்சிக்கேர்ப்ப பலவிதமான தியான முறைகளையும் ,வழிபாடு முறைகளையும் ,தத்துவ விளக்கங்களையும் அருளாளர்கள் ஏற்படுத்தி வைத்தார்கள் . அவர்கள் ஏற்ப்படுத்தி தந்த வழிமுறைகளின்படி வாழ்ந்தும் காட்டினார்கள் .
இதைத்தவிர இறைவனே பலமுறை இப்பூவுலகில் அவதரித்து தன்னை அடையும் மார்க்கங்களையும் ,தத்துவ நூல்களையும் அருளி செய்ததுடன் ,சில அவதாரங்களில் தானே நடந்து காட்டியும் ,எவ்வாறு கடைபிடிக்கவேண்டும் என்பதையும் காட்டி சென்றுள்ளான் ,
அவரவர் மன முதிர்ச்சிக்கு ஏற்ப பல வழிகளை கையாண்டுஇறைவனை உணர்ந்து அடைந்தனர் பலர்..
ஆனால் அவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளது இறைவனை உணர்ந்துகொள்ள அனேக எளிய வழிகள் இருப்பினும் மக்கள் தங்களுக்கு பொருத்தமில்லாத ,தத்துவங்களை தவறாக புரிந்துகொண்ட குழப்பமான வழிகளைக்காட்டும் மூடர்களின் பாதைகளை தேர்ந்தெடுத்துக்கொண்டு ,தங்கள் அறிவிற்கும் தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கும் நம்பிக்கைகளுக்கும் ஒவ்வாத முறைகளை கையாண்டு இவ்வுலகில் இன்ப மயமாக வாழ இறைவன் அளித்த அரிய பிறவியை வீனடிப்பதுடன் அவர்களும் துன்பத்தில் ஆழ்த்து பிறரையும் துன்பத்தில் ஆழ்த்தி வருவதுடன் இவ்வுலகை நரக மயமாகி வருகின்றனர் .என்றால் அது மிகையாகாது .இறைவன் கொடுத்த இந்த இன்ப பிறவியை எவ்வாறு நல்ல முறையில் பயன்படுத்தி நாமும் நாமிருக்கும் உலகில் உள்ள அனைத்து மக்களும் , உயிரினங்களும் இன்ப மாக வாழும் வழியைப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம் ..

No comments:
Post a Comment