Saturday, October 4, 2008
MAINAAS CORNER
மைனா:.பணவீக்கம் , பண வீக்கம் எங்கு பார்த்தாலும் மனிதர்கள் பேசிக்கொள்கிறார்களே? அப்படீன்னா என்ன?.நான் பார்த்த வரையில் ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் அப்படியேதான் இருக்கின்றன.ஒன்றும் வீங்கி போனதாக தெரியவில்லை.
மைநீ:அப்படி இல்லை.எந்த காலத்திலும் ருபாய் நோட்டுக்கள் வீங்காது.அப்படியேதான் இருக்கும்,அதன் மதிப்புதான் அவ்வப்போது மாறிக்கொண்டு இருக்கும். சில காலங்களில் ஒரு பொருளை வாங்க மிக குறைந்த செலவு ஆகும் .சில காலங்களில் அதே பொருளுக்கு அதிக விலை கொடுக்கவேண்டியிருக்கும். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்.சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ கத்திரிக்காய் 10 ரூபாய்க்கு வாங்க முடிந்தது இன்று ,அதே பொருள் 25 ருபாய். அதே போல் ஒரு கிலோ காரட் அன்று 16 ரூபாய்.இன்று 32 ரூபாய்.விற்கிறது.பணத்தின் மதிப்பு குறைந்துகொண்டே போனால் எவ்வளவு சம்பாதித்தாலும் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்ப்படும்.
மைனா:நமக்கு அந்த பிரச்சினையே கிடையாது.நாம் எதையும் சேர்த்து வைப்பதும் கிடையாது.விலைக்கு வாங்கி சாப்பிடுவதும் கிடையாது.இயற்கையில் உள்ளதை நமக்கு தேவைக்கு மட்டும் எடுத்துகொள்கிறோம்.ஆனால் மனிதர்கள் மட்டும் ஏன் இப்படி இயற்கைக்கு மாறாக நடந்துகொள்கிறார்கள்?
மைநீ:அவர்கள் ஆறறிவு படைத்தவர்கள்.அந்த ஆறாவது அறிவுதான் அவர்களை அகந்தையும்,சுயநலமும்,பேராசையும் பொறாமையும் கொண்ட தீயவர்களாக ஆக்கிவிட்டது.எல்லாம் இருந்தும் எப்போதும் அவர்கள் துன்பபட்டுகொண்டும் பிற உயிர்களையும் ,பிற மனிதர்களையும் எப்போதும் துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.ஐயோ பாவம்.மனிதர்கள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment