Sunday, October 5, 2008

அகில உலக காக்கை தமிழர் பேரவை

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!
தமிழர்களையும்,தமிழ் நாட்டையும் பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகள்
கச்ச தீவு விவகாரம்
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை அரசு பிடித்துசென்று சிறையில் அடைத்து துன்புறுத்துவதும்
,சுட்டு தள்ளுவதும்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர் நடத்தி அவர்களை அழிக்கும் விவகாரம்
கர்நாடக அரசு தமிழ் நாட்டிற்கு அளிக்கவேண்டிய காவிரி நதி நீரை தராமல் சண்டித்தனம் செய்வது
கேரளா அரசு முல்லை பெரியாறு அணை கரையை உயர்த்த மறுப்பது,
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது
ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது,
இன்னும் தீர்வை எதிநோக்கி இருக்கும் பல பிரச்சினைகள் உள்ளன
.இவைகளை தேவைப்படும் நேரத்தில் எடுத்து அரசியல் பண்ணுவதை விடுத்து
எங்களைப்போல் எதிரும் புதிருமாக உட்காராமல்
அனைத்து வேறுபாடுகளை மறந்து தமிழர்கள் நிம்மதியாக தன்மானத்துடன் வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் ஒருமித்த கருத்துடன் அணுகி பிரச்சினைகளை
முடிவுக்கு கொண்டு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இப்படிக்கு அகில உலக காக்கை தமிழர் பேரவை.
Posted by Picasa

No comments: