இந்தியாவின் மறு பக்கம்
அதிகமா படிச்சவனெல்லாம் பாரின் போறான்
அதிகமா படிக்காதவனெல்லாம் வேலை எதுவும் கிடைக்காமல்
டாஸ்மாக் பாருக்குதான் போறான்
அந்நிய செலாவணி இருப்பு ஏராளம்
அந்நிய கம்பெனிகளுக்கு இங்கே தாராளம்
அனைத்தும் கம்ப்யூட்டர் மயம்
அங்கே வேலை செய்வோர்க்கு மட்டும் ஆயிரகணக்கில் சம்பளம்
வயிறு நிறைய சாப்பாடு ஆடம்பரமான வாழ்க்கை
லட்சகணக்கான மக்களுக்கு வேலையில்லை
அவர்களுக்கு வேலை அளிக்க எந்த அரசுக்கும் நாதியில்லை
வேலையில்லாதவன் திருடனாகிறான் ,தீவிரவாதியாகிறான் ;
சமூக விரோதியாகிறான்
போதைக்கு அடிமையாகிறான்
உழைப்பவனுக்கு ஏற்ற ஊதியமில்லை
உழைப்பவனை மதிக்கும் குணமும் இல்லை
பிறரை ஏமாற்றி வாழ்க்கை நடத்துபவர்களுக்கு பஞ்சமில்லை
எல்லாவற்றையும் நம்பி ஏமாறும் மக்களுக்கு பஞ்சமில்லை
அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள்
படித்தவனை படிக்காதவன் ஏமாற்றுகிறான்
படிக்காதவன் படித்தவனை ஏமாற்றுகிறான்
கணவன் மனைவியை ஏமாற்றுகிறான்
மனைவி கணவனை எமற்றுகிறாள்
பெற்றோர் குழந்தைகளை ஏமாற்றுகிறார்கள்
குழந்தைகள் பெற்றோர்களிடம் கற்ற வித்தையை அவர்களுக்கே காட்டுகிறார்கள்
முதலாளிகள் தொழிலாளிகளை மோசம் செய்கிறார்கள்
வணிகர்கள் வரி கட்டாமல் அரசை ஏமாற்றுகிறார்கள்
போலிகளை விற்று மக்களை மோசம் செய்கிறார்கள்
எதற்கெடுத்தாலும் லஞ்சம்,
எதிலும் கலப்படம் உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் உணவு பொருட்கள் உட்பட
பட்டிதொட்டி எல்லாம் தள்ளுபடி மோசடிகள்
எங்கு பார்த்தாலும் இலவச மோசடிகள்
மக்களின் உயிரோடு விளையாடும் போலி மருந்து தயாரிப்புகள்
மக்களை ஏமாற்றி கொழுக்கும் போலி மருத்துவர்கள்
லட்சக்கணக்கில் மாணவர்களின் பணத்தை சூறையாடும் போலி பயிற்சி பள்ளிகள்
ஆசைக்கு மயங்கும் அணங்குகள்
அவர்கள் விரிக்கும் வலையில் சிக்கும் இளைநர்கள்
அரசுகளின் இலவச அறிவிப்புகள்
எங்கு பார்த்தாலும் சூதாட்ட அரங்குகள்
எங்கு பார்த்தாலும் மக்களை போதைக்கு ஆளாக்கி
வாழ்வை சீரழிக்கும் அரசின் மதுபான கடைகள்
வீட்டிற்குள்ளும் வெளியிலும் உயிர்க்கும்,உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை
எங்கு பார்த்தாலும் மனித கழிவுகள்
பிளாஸ்டிக் ,மற்றும் மிருக கழிவுகள் மற்றும் குப்பை கூளங்கள்
இது போதாதென்று வெளிநாட்டு கழிவுகளை விலைக்கு வாங்கி நம் நாட்டில்
புதைக்கும் அசிங்கம்
சுகாதாரமற்ற பொது சுகாதாரத்துறை
தான் பதவியில் இருந்தால் இல்லாத பிரச்சினை
எதிர் கட்சியில் மட்டும் இருக்கும்போது மக்கள் விரோத கொள்கையாக்கி
கலவரம் செய்யும் சுயநல அரசியல் கட்சிகளின் தலைவர்கள்
சிலைகளை வைக்க போராட்டம் , சிலையை சிலர் சேதப்படுத்தினால் போராட்டம்
வைத்த சிலையை எடுக்க ஒரு போராட்டம்
இந்த அரசியல் கட்சிகளின் பகடை காய்களாக பயன்படுத்தப்பட்டு
விட்டில் பூச்சிகள் போல் இரையாகும் கட்சி தொண்டர்கள் ஒருபுறம்
நாகரீகத்தை பறை சாற்றும் கண்காட்சிகளில் காசிருந்தும் உடலில் துணியில்லை
ஆனால் நாட்டுப்புறங்களில் காசில்லாமல் உடலில் போட துணியில்லை போன்ற அவலங்கள்
விழாக்களில் லட்சகணக்கில் செலவு செய்து உணவுபொருட்கள் வீணடிக்கப்படும் அவலம் ஒரு புறம்
ஒரு வேலை சோற்றுக்கே வழியில்லாமல் தவிக்கும் கோடிக்கணக்கான இந்தியா மக்கள்
அரசு கிடந்குகளிலோ உணவு கையிருப்பு ஏராளம்
எலிகளுக்கு மட்டும் தாராளம்
ஏழை மக்களுக்கு மட்டும் மலிவு விலையில் மக்கிய அரிசி
அதையும் கடத்தி விற்று காசு பார்க்கும் அரசியல் கட்சிகள்
மலிவு விலை அரிசி வாங்க குடும்ப அட்டை இருந்தால்தான்
அதை வாங்குவதற்குள் பாதி உயிர் போய்விடும்
அது இல்லையென்றால் அவர்களின் வயிறு காலி
கிடங்கில் மக்கிபோக விடும் அரசுகள்
ஏழைகளுக்கு இலவசமாக வழங்க மட்டும் மறுப்பதேனோ ?.
ஏழைகளுக்கு இருக்க இடமில்லை
சாலையோரம் ,மேம்பாலம் அடியில் ,மரத்தினடியில் ,பாழடைந்த கட்டிடங்களில் ,,பேருந்து நிலையங்களில் ,ரயில் நிலையங்களில் ,குடித்தனம்
பணக்காரனுக்கோ ,10000 சதுர அடியில் டபுள் பெட்ரூம் பிளாட்
வீட்டில் இருப்பதோ 3 பேர்கள்தான்
அதுவும் வீட்டில் தங்குவது மாதத்தில் 3 நாட்கள்
அரசியல்வாதிகள் பறப்பது காரில்
அடித்தட்டு மக்கள் தங்களை மறப்பது பாரில்
லட்சகணக்கில் செலவு செய்து அழகி போட்டிகள்
உடலில் துணியில்லாமல் அதை ரசிக்க
உடல் முழுவதும் பலவிதமான ஆடைகள் அணிந்து ரசிக்கும் பணக்கார பட்டாளம்
கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து ராக்கெட் விடுவோம்
பெண்களின் மானம் காக்க ஜாக்கெட் வாங்க காசில்லா அவலம்
வீட்டிற்கு வெளியே முழங்குவது பெண்ணுரிமை
வீட்டிற்குள்ளோ பெண் அடிமை
ஆபாச கூத்தடிக்கும் பெண்கள் ஒருபுறம்
ஆபாசத்தை ஒழிக்கவேண்டும் என்று கேலி
கூத்தடிக்கும் மாதர் சங்க அமைப்புகள் ஒருபுறம்
காமத்துக்கு ஜாதி தேவையில்லை
ஆனால் பள்ளியில் சேர கண்டிப்பாக ஜாதி சான்று இந்நாட்டில் தேவை
திருடி பிழைக்க மதம் தேவையில்லை
ஆனால் உழைத்து பிழைக்க மதம் தேவை
திருமணத்தை அங்கீகரிக்க சமூகத்தில் மதம் தேவை
காசுக்காக கால் சென்டரில் இரவு முழுதும் கண்விழித்து பகலில் உறங்கி உருவாகும் மனநோயாளிகள்
ஆட்சிகள் மாறும் காட்சிகள் மாறும்
ஆனால் மேற்கண்ட அவலங்களுக்கு விடிவு காலம் அன்றும் இல்லை இன்றும் இல்லை என்று வருமோ யாருக்கும் தெரியாது
நிலத்தை உழுபவன் அழுவதை தவிர வேறு வழியில்லை
நெல்லை விதைப்பவன் புல்லைத்தான் அறுவடை செய்கிறான்
வட்டிக்கு கடன் வாங்கி பயிர் செய்பவன் தன் உலை வைக்கிறான் சமையலறையில் அல்ல
கரும்பு பயிரிடுபவன் அதை எரும்புக்குதான் போட வேண்டும் ஏனென்றால் அரசு விலை நிர்ணயித்து அரைக்க உத்திரவிட ஆகும் காலதாமதத்தால்.
விலை அறிவித்தாலும் காசும் உடனே கிடைக்காது
கூட்டுறவு சங்கங்களினால் அதன் உறுப்பினர்களுக்கு எந்த பயனும் கிடையாது
அது சங்க தலைவர் மற்றும் அரசியல் கட்சிகளின் ஏக போக சொத்து
பயிருக்கு போட பூச்சி மருந்து அன்று
இன்று கடனில் சிக்கி தவிக்கும் விவசாயிகளின் உயிரின் விடுதலை தரும் அருமருந்து
இடத்திற்கு சண்டை , மடத்திற்கு சண்டை ,எந்த அமைப்பை எடுத்தாலும் ஆதிக்க சண்டை
அறிக்கை விடத்தான் அரசுகள்
பிரச்சினைகளை தீர்க்க அல்ல
திட்டங்களை அறிவிக்கத்தான் அரசியல்வாதிகள் செயல்படுத்த அல்ல
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறும் அரசுகள்
தம்மை வாழ வைக்கும் என்று நம்பி ஏமாறும் அப்பாவி மக்கள்
தொலைநோக்கு பார்வை இல்லாத அரசியல் தலைவர்கள்
மக்களுக்கு தொல்லை தருவதையே கொள்கையாக கொண்ட அரசியல் கூட்டணிகள்
நாட்டில் பல பகுதிகளில் வருடம்தோறும் வெள்ளம் ,
பல பகுதிகளில் வானம் பொய்த்து வறண்டு மக்களை துயரில் ஆழ்த்தும் அவலங்கள்
நதிகளை இணைக்க நாடு முழுவதும் கோரிக்கைகள்
அதை தடுக்க போராடும் சுயநல அரசியல் கட்சிகள்
மழை பெய்தாலும் பஞ்சம் , வெய்யில் காய்ந்தாலும் பஞ்சம்
நிவாரணம் வழங்க கோரிக்கைகள்
பஞ்சத்தை பார்வையிட பத்து பேர் கொண்ட கமிட்டீ
அவர்களுக்கு பன்னாட்டு ஓட்டலில்மதுவுடன் பார்டி
வயிறு காய்ந்த மக்களுக்கு வாய் நிறைய யோசனைகள்
பல கோடிக்கு நிவாரணம் அறிவிப்பு -பத்திரிக்கைகளில் பரபரப்பு பெட்டி
நிவாரணம் கிடைக்காமல் மக்கள் தவிப்பு -நிவாரணம் பெற தள்ளுமுள்ளு சாவுகள்
நிவாரணம் சென்று சேர்வது யாரை - எல்லோருக்கும் தெரியும்
கலை என்றால் அரைகுறை ஆடையுடன் ஆபாச அசைவுகள்
ஆட்டம் என்றால் தொப்புள் ஆட்டம் தான்
பாட்டென்றால் ஆபாச பாட்டுகள்
தொலைகாட்சி தொடர்கள் என்றால் பெண்களே
பெண்களை கொடுமை செய்யும் வக்கிர உறவு காட்சிகள்தான்
படங்கள் என்றால் ஒழுங்கீனத்தை நியாயப்படுத்தும் வன்முறை படங்கள் தான்
கொள்ளை அடிப்பவன் கோயில் கட்டுவான்
கோயில் கட்டி கோயில் சொத்தையும் கொள்ளை அடிப்பான்
சிலையை கடத்துவான் தடுப்போரை கொலையும் செய்வான் ,கடத்தி விற்று காசும் பார்ப்பான்
கல்லூரி நடத்துவான் , காசும் சேர்ப்பான்
இவையெல்லாம் நடக்கும் , இன்னமும் நடக்கும்
மக்கள் சிந்திக்க தொடங்கும் வரை
அந்தோ பரிதாபம் !அரசியல்வாதிகள் அவர்களை சிந்திக்க விட மாட்டார்கள்
மெகா சீரியல்வாதிகளும் அவர்கள் பங்கை ஆற்ற தவறமாட்டார்கள்
கிளர்ச்சியூட்டும் கவர்ச்சி விளம்பரங்களுக்கு பஞ்சமில்லை
இலவசங்களுக்காகவே தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும்
மக்களின் மனோபாவத்திலும் மாற்றமில்லை
நடுவில் மதவாதிகள் மக்களை குழப்பி அவர்களை வெறியர்களாக்கி மோதவிட்டு அவர்கள் கோடீஸ்வரர்களாகி சுக போகத்தில் திளைத்து கொட்டமடிக்கும் அவலமும் இங்கு உண்டு.
பாவம் இந்தியா மக்கள்
No comments:
Post a Comment