Friday, September 12, 2008

புத்த மதம் படும் பாடு



ஆசையின் முதல் எழுத்து ஆண்டவனைக்குறிக்கும்
இரண்டாம் எழுத்து சைத்தானை குறிக்கும்
இவ்வுலகில் இரண்டும் உண்டு
அவ்வுலகில் ஆண்டவன் மட்டும் உண்டு
ஆசையில்லாவிடில் அசைவுகள் இல்லை
வசவுகள் இல்லை ,வம்புகள் இல்லை ,துன்பம் இல்லை
துயரங்கள் இல்லை ,மாளா பிறவிகளும் இல்லை
ஆசைகள் இருக்கலாம் ,அதனால் ஏற்படும் துன்பம் அளவோடு இருக்கும்
பேராசை கூடாது ,அதனால் ஏற்படும் துன்பம் பெரிய அளவில் இருக்கும்
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றான் புத்தன்
ஆசையால் வந்த பந்தத்தை துறந்து வீட்டை விட்டு வெளியேறிய புத்தன் போதி மரத்தடியில் ஞானம் பெற்றான் . பல ஆண்டுகள் உடலையும் ,உள்ளதையும் ,வருத்தி
தவமிருந்து எதற்காக ,? யாருக்காக ?
இந்த உடல் நிலையில்லாதது
,இதன் மீது பற்று வைக்காதே என்றான்
இறைவனை திருப்திபடுத்த யாகத்தில் உயிர்களை
பலியிடவேண்டாம் என்று போதித்தான்
மேம்பட்ட மனித பிறவியான தன்னை
பலியிட வேண்டினான்
சிலர் மனம் மாறினர்
இந்து மதத்தில் அதிருப்தி கொண்ட
பலர் மதத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.

பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பும்
புத்த மதத்திற்கு மாறுபவர்கள்
அதன் கொள்கைகளுக்காக மாறவில்லை
இந்து மதத்தில் நிலவும் தீண்டாமை கொடுமையிலிருந்து
விடுதலை பெறவே மதம் மாறுகின்றனர்
புத்த மதம் உலகின் பல நாடுகளில் பரவியது .
இந்து மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு சென்றவர்கள்

தங்கள் மதத்தைதான் மாற்றிகொண்டார்களே ஒழிய
அதன் கொள்கைகளின்படி வாழ்க்கையை வாழவில்லை
தங்கள் வழக்கப்படி உருவ வழிபாட்டை கண்டித்த
புத்தனுக்கே சிலைகள் வைத்து ,விஹாரங்கள் கட்டி

உருவ வழிபாட்டை தொடங்கிவிட்டனர்.
அகிம்சையை போதித்த புத்த மதத்தில்

இன்று ஹிம்சைதான் தலையாய கொள்கையாக
கடைபிடிக்கப்பட்டு வருகிறது
எதற்கும் அசையாத மனம் படைத்த
புத்த பிக்குகள் உடுப்பதோ காவி உடை
உண்பதோ அசைவம்
புத்தன் போதித்த அகிம்சையை
கடைபிடித்திருந்தால் ஜப்பானிய மக்கள்,
சீன மக்களை படுகொலை செய்திருப்பார்களா ?
இன்று புத்த மதத்தை கடைப்பிடிக்கும்
சிங்கள தாய்லாந்து சீன மற்றும்
ஜப்பானிய மக்கள் புரியும்
உயிர் கொலைகளுக்கு அளவேது?,
புத்த மதத்தை பின்பற்றும் சிங்கள மக்கள்

அகிம்சையை கடைபிடித்து அன்பு வழி நின்றிருந்தால்
தமிழ் மக்களை இன படுகொலை செய்து கொண்டிருப்பார்களா ?;
இல்லையே ? இன்னும்படுகொலைகள்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறதே ?
அது இன்று கடலில்l மீன் பிடிக்கும்
நம் நாட்டு மீனவர்களை
கொலை செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டதுவே ?
புத்தம் சத்தமில்லாமல் செத்துவிட்டது
புத்த மதத்தின் காவலனாக விளங்கிய
திபெத் நாட்டு மக்கள் நாடிழந்து
வீடிழந்து உலகெங்கும் அகதிகளாய்
சுற்றி திரிவதன் காரணம் என்ன ?
மதத்தின் பெயரால் மடங்களும்
துறவு என்ற பெயரில்
சோம்பேறிகளையும் மக்கள் எவ்வளவு
காலம்தான் பொறுப்பார்கள் ?
அதன் விளைவுகள்தான்
இந்த அகதிகள் வாழ்க்கை
மனிதனை அரவணைத்து
அவன் வாழ்க்கையோடு
ஒட்டி போகும் மதங்கள்தான் வாழும் ;
பிற மதங்கள் எல்லாம் கால போக்கில்
சுவடுகள் இல்லாமல் போய்விடும்
பல்லாண்டுகள் தவம் செய்தும்
மனதின் தன்மையை புத்தன் புரிந்துகொண்டதை
அவன் மதத்தை பின்பற்றுபவர்கள்
புரிந்துகொள்ளவில்லை என்பதே
இந்த நிலைக்கு காரணம்

No comments: