எல்லா தாய்களும் பெண்கள்தான் ;
ஆனால் எல்லா பெண்களும் தாயல்ல
தன் தாய்க்கு சேயாக விளங்கும் அவள்
தன் சேய்க்கு தாயாக விளங்குகிறாள்
தன் கணவனுக்கு தாரமாக விளங்கும் அவள்
வயதான பின் அனைவருக்கும் பாரமாகி போவது ஏனோ ?
இளமைக்காலத்தில் தாயின் மீது பாசம் காட்டு
வயதான காலத்தில் அவள் மீது அன்பு காட்டு
நோய் வந்து படுக்கையில் பரிவு காட்டு
அவளிடம் பேசுகையில் கனிவு காட்டு
மனைவியுடன் இன்பமாக இரு , தவறில்லை
அதற்காக தாயின் மனதை நோகடிக்காதே
பெண்கள் பேதலிக்கும் புத்தி உடையவர்கள்
அவர்கள் உள்ளம் எளிதில் உடைந்துவிடும்
ஆனால் உடைந்த வேகத்திலேயே ஒன்று சேர்ந்துவிடும்
ஆண்கள் கொஞ்சம் சகிப்பு தன்மையுடன் நடந்து கொண்டால் போதும்
No comments:
Post a Comment