Sunday, December 15, 2013

குடத்திற்குள் ஒளிவிடும் சுடர்கள் (1)

குடத்திற்குள் ஒளிவிடும் சுடர்கள் (1)

இந்த உலகில் பலவிதமான திறமைகளை தங்களுக்குள் 
மறைத்து வைத்துக்கொண்டு வெளிச்சதிற்கு வராமலும் 
பாராட்டப்படாமலும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குள்ளேயே அந்த திறமைகளை பாராட்டி மகிழ்ந்து கொள்வதும் வீட்டிற்கு வரும் 
ஒரு சில பாராட்டும் உள்ளம் கொண்டவர்களின் பாராட்டிலேயே உச்சி குளிர்ந்து போவதும் உண்டு.

அப்படிப்பட்ட ஒருவரின் படைப்புக்களை இனி வெளியிடலாம் என்று நினைத்தேன். 

எல்லோருக்கும் பாராட்டும் உள்ளம் சத்தியமாக கிடையாது. 
இந்த உலகில். 
அப்படி சிலர் பாராட்டுவதும் உண்மையாக இருக்காது. 

கோடியில் ஒரு சிலர்தான் ரசித்து மனம் திறந்து பாராட்டுவர். என்பது அனைவரும் அறிந்த உண்மை. 

இந்த பதிவில் வரும் படங்கள் அனைத்தும் முறையாக ஓவிய பயிற்சி பெறாமல் தன் முயற்சியினால் ஒரு 59 வயது நிரம்பிய ஒருவரால் வரையப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. .


7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஓவியம் மிகவும் அருமை ஐயா...

வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

நீங்கள் வரைந்ததா? நன்றாக இருக்கிறது.

ஸ்ரீராம். said...

To Follow

kankaatchi.blogspot.com said...

பாராட்டுக்கு நன்றி.

என்னுடைய ஓவியங்களை ஏற்கெனவே என்னுடைய மற்றொரு வலைப் பதிவான ராமரசம், சிந்தனை சிதறல்களில் தினமும் கண்டு வருகிறீர்கள்

இந்த பதிவில் இனி வரும் படங்கள் எல்லாம் 59 வயதுள்ள ஒரு குடும்ப தலைவியால் வரையப்பட்டவை.

நூற்றுக்கணக்கில்
அனாயாசமாக கடந்த ஓராண்டில் வரைந்து தள்ளியுள்ளார்.

அவைகளைஇனி ஒவ்வொன்றாக வெளியிடுவேன்

மூன்று ஆண்டுகளுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்டு இறைவன் அருளால் தற்போது மருந்து மட்டும் உணவு கட்டுப்பாடின்மூலமும் நலமாக இருக்கிறார்

நடந்ததை நினைத்து முடங்காமல் ஓவிய திறமை அவரை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறது.
என்றால் அது மிகையாகாது.

பாராட்டிற்கு நன்றி DD

kankaatchi.blogspot.com said...

நன்றி ஸ்ரீராம் அவர்களே
உங்கள் பாராட்டு உரியவரிடம் போய் சேரும்.
படம் வரைந்தவரின் விவரம் தந்துள்ளேன். தகவலுக்காக

Venugopal K said...

பெரிய மருத்துவர் அந்த "வைத்தீஸ்வரன்". அவன் இருக்கான்.
"ஏகலைவன்" யாரிடம் கற்றார்? படம் வரைந்தவர்க்கு இறையருள்
இருக்கு..எனவேதான் வரைய முடிகிறது...நான் வயதில் பெரியவன்...
என்றாலும் என் நமஸ்காரத்தை சொல்லவும் அவருக்கு.

kankaatchi.blogspot.com said...

நிச்சயமாக .உங்கள் போன்றோரின் வாழ்த்துக்கள் அவரின் வாழ்நாளை நிச்சயம் நீட்டிக்கும். இறைவனிடம் பக்தி பலன் கருதாது பக்தி செலுத்தினால் போதும். அனைவரிடமும் அன்பாக நடந்துகொண்டால் போதும். மகான்களை அனுதினமும் நினைத்து உண்மையுடன் வணங்கினால் போதும்.யாருக்கு எதைக் கொடுத்தாலும் மன நிறைவோடு கொடுத்தால் போதும். இறைஅருள் நம்மோடு துணை நிற்கும் என்பதற்கு அந்த பெண்மணியின் வாழ்க்கை ஒரு உதாரணம்.
உங்கள் பாராட்டிற்கு நன்றி.VK